உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி

சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி

நாயண்டஹள்ளி; இரு சக்கர வாகனத்தில் சென்ற போலீஸ் ஏட்டின் மீது லாரி ஏறியதில் அவர் பலியானார். தாவணகெரேயை சேர்ந்தவர் மனு, 30. இவர் பெங்களூரு ஆயுதப் பாதுகாப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, நண்பரை சந்தித்துவிட்டு, தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.நாயண்டஹள்ளி ரிங் ரோடு சர்வீஸ் சாலையில் சென்ற போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இவ்வேளையில், அவர் மீது லாரி ஏறியுள்ளது.தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவர், ஹெல்மேட் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது.பேட்ராயனபுரா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை