வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உள்க்கட்டமைப்புக்களில் கவனம் செலுத்துவது சிறப்பு.
புதுடில்லி: ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில்வே திட்டத்தில், மலையை குடைந்து, 31 நாட்களில் சுரங்கப்பாதை அமைத்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில், 125 கி.மீ., தொலைவுக்கு ரிஷிகேஷ் - -கர்ணபிரயாக் அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த கட்டுமானத்தை, 'எல் அண்டு டி' நிறுவனம் செய்து வருகிறது. இரட்டை சுரங்க வழித்தடமான இதில், 10.47 கி.மீ., தொலைவுக்கு பூமிக்கு மேலே கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணி ஏப்ரல் 16ல் நிறைவடைந்தது. இதையடுத்து, பூமிக்கு கீழே, 13.09 கி.மீ., தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி துவங்கியது. இதற்கு ஷிவ் என்ற துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி, 31 நாட்களில் அதிகபட்சமாக, 790 மீட்டர் துாரத்துக்கு பாறையை தோண்டி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 29ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதன் வாயிலாக, உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேவ்பிரயாக் மற்றும் ஜனசு இடையே கட்டி முடிக்கப்பட்ட இந்த இரட்டை சுரங்கப்பாதைகள், நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதைகளாக அமைகின்றன. இந்த பாதை அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்க்கட்டமைப்புக்களில் கவனம் செலுத்துவது சிறப்பு.