உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்; லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருக்கு வலைவீசும் என்.ஐ.ஏ.,

துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்; லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருக்கு வலைவீசும் என்.ஐ.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.மும்பையில் கடந்த அக்.,12ம் தேதி இரவு மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான பாபா சித்திக் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரிய வந்தது. குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயிக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், பானு எனப்படும் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது. இவன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2022ல் பஞ்சாப் பாடகர் சித்து மோசேவாலா கொலை வழக்கிலும் இவன் தேடப்பட்டு வருகிறான். கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மும்பை போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டான். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் அன்மோல் பிஷ்னோய், போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த ஆண்டு கென்யாவுக்கு தப்பியோடிய நிலையில், தற்போது கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
அக் 25, 2024 18:27

அரசியல் வியாதி பணக்காரன் டான்- ரவுடி - தாதா தீவிரவாதி - கொலை கொள்ளை ஊழல் கற்பழிப்பு இந்துவாக இருந்து கொண்டு 4 திருமணம் செய்தால் வழக்கு கைது 5 ஸ்டார் ஜெயில் பிறகு ஜாமீன் 20 வருடம் வழக்கு இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை ஒன்று கைது செய்யப்பட்டவன் இறப்பான் இல்லை இந்திய அநீதிமன்றம் அந்த வழக்கில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று எவ்வளவு பெட்டி வாங்கினார்களோ இந்த போலீஸ் அநீதிமன்றம் ஆட்சியாளர்கள் அதைப்பொறுத்து விரைவில் அல்லது பல வருடங்கள் கழித்து விடுவிக்கப்படுவார்கள் சந்தேகத்தின் பேரில். இது தானே 77 வருடமாக நடந்து கொண்டிருக்கின்றது இந்தியாவில்


Ram pollachi
அக் 25, 2024 15:02

நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்களை பற்றியே ஒன்னும் தெரியாது இந்த லட்சணத்தில் பஞ்சாப் பானு பற்றி எப்படி துப்புவது? தமிழக மாணவர்களை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலை கழகத்தில் சேர்த்துவிடும் போக்கு தற்போது அதிகமாகிவிட்டது... தெரிந்தே தவறு செய்யும் பெற்றோர்களை என்ன செய்வது.


Ramesh Sargam
அக் 25, 2024 13:26

என்னதான் துப்புக்கொடுத்தவர்களுக்கு சன்மானம் கொடுத்து குற்றவாளியை பிடித்தாலும், வழக்கு தொடர்ந்தாலும், நீதிமன்றம் பல வருடங்கள் வழக்கை ஓட்டியபிறகு, முடிவில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் இந்த நீதிமன்றம் குற்றவாளியை நிரபராதி என்று கூறி விடுவிக்கும். எவ்வளவு வழக்குகளில் பார்த்திருப்போம் இதுபோன்ற தீர்ப்புக்களை.


ஆரூர் ரங்
அக் 25, 2024 11:25

ஆனா இங்கே அணிலின் உடன்பிறப்பு தேடப்படும் (ஆனால் உண்மையில் தேடப்படாத) குற்றவாளியாகவே உள்ளார். கோர்ட் க்கு நன்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை