மேலும் செய்திகள்
மனம் கவரும் மணல் ஓவியங்கள்: அசத்தும் பூ வியாபாரி
26-Jan-2025
பாலக்காடு; கேரள மாநிலம், மன்னார்க்காடு - அட்டப்பாடி கணவாயில் உள்ள மலைப்பாதையில், வாழ்க்கை மற்றும் கலாசார கதைகளை ஓவியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்க்காடு அருகியுள்ளது அட்டப்பாடி. மாநிலத்தில் அதிகளவில் பழங்குடியினர் வசிக்கும் வன எல்லை பகுதியான அட்டப்பாடியின், வாழ்க்கை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், மன்னார்காடு - அட்டப்பாடி கணவாயில் உள்ள மலைப்பாதையில், ஓவியங்கள் வரையும் பணிகள் நடக்கிறது.இதுகுறித்து, மன்னார்க்காடு வனச்சரக அதிகாரி சுபைர் கூறியதாவது:மன்னார்க்காடு வனச்சரகத்தில், கணவாயில் உள்ள மலைப்பாதையை அழகு படுத்துவதன் ஒரு பகுதியாக, 'எமது அட்டப்பாடி' என்ற தலைப்பில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பழங்குடியின மக்களின் வாழ்க்கை, கலை, விவசாயம், கலாசாரம் மற்றும் சுற்றுலா பகுதிகள் என, அனைத்தும் இங்கே ஓவியங்களாக வரையப்பட உள்ளது. இயற்கை பாதுகாப்பை மையப்படுத்திய தகவல்களும் ஓவியத்தில் இடம்பெறுகின்றன.தற்போது, 'காட்டுத்தீ மக்கள் பாதுகாப்புப் படை' என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளான திரைப்படக் கலை இயக்குநர்கள் உண்ணிவரதம் மற்றும் பிரமோத்பள்ளி ஆகியோர் தலைமையில், 10 ஓவியர்கள் இத்திட்டத்தில் இணைந்து சுவரோவியம் வரைந்து வருகின்றனர்.20 அடி உயரமுள்ள ஒரு பாறையில், பறவைகள், செடிகள், பூக்கள், நீரூற்று போன்றவை வரைந்து, அப்பகுதியை 'செல்பி பாயின்ட்' ஆக மாற்றி வருகின்றனர்.'நான் எனது இயற்கையை அழிக்க மாட்டேன்' என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை 'செல்பி பாயின்ட்'களின் நோக்கமாகும்.வரும் நாட்களில், பல்வேறு தன்னார்வு அமைப்புகள் திட்டத்தில் இணைந்து ஓவியங்கள் வரைய உள்ளனர். மலைப்பாதையின் மேல் பகுதியான மந்தம்பொட்டி வரை ஓவியங்களால் அழகுப்படுத்த உள்ளனர்.மலைப்பாதையில் பயணிப்போர், இந்த ஓவியங்கள் வாயிலாக, இயற்கை அழகு, கிராமிய வாழ்க்கையின் அரிய காட்சிகளை காணலாம். இதுபோன்ற நடவடிக்கைகளால், அட்டப்பாடி கணவாய் பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
26-Jan-2025