உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறான கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும்; எச்சரிக்கிறார் ராகுல்!

தவறான கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும்; எச்சரிக்கிறார் ராகுல்!

புதுடில்லி: 'திறமையற்ற அரசும் தவறான கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறுகுறு தொழில்கள் மற்றும் முறைசாரா துறைகளை அழித்ததன் மூலம் ஏகபோகங்களுக்கு வழிவகுத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும், ஊழல் மற்றும் கருப்புப் பணத்தைத் தடுக்க பணப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதும் அப்போது அரசு கூறிய காரணங்களில் ஒன்று. 8 ஆண்டுகளுக்கு முன்பு, பண மதிப்பிழப்புக்கு முன் இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தை பயன்படுத்துகிறது. ரொக்க பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. திறமையற்ற மற்றும் தவறான நோக்கங்களைக் கொண்ட கொள்கைகள், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Raghavan
நவ 09, 2024 13:38

உங்க குடும்பத்த இந்த நாட்டைவிட்டே ஓட செய்தால்தான் இந்த நாடும் உருப்படும் மக்களும் உறுப்புடுவார்கள். உன் அப்பா தாத்தா பாட்டி அடிக்காத கொள்ளையா. போறதா வேலைக்கு ராபர்ட் வடேற வேற அவற்பாட்டுக்கு அவர் தனி ஆவர்த்தனம் பண்ணி கொள்ளை அடிக்கிறார். இந்த நாட்டில் தான் இப்படி செய்ய முடியும். வேறு நாட்டில் இதை செய்து இருந்தால் இந்நேரம் கோவிந்தா கோவிந்தா ஆகி இருக்கும்.


SUBRAMANIAN P
நவ 09, 2024 13:33

என்ன பொருளாதார கொள்கை , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே


மோகனசுந்தரம்
நவ 09, 2024 12:38

எப்பேர்பட்ட பொருளாதார நிபுணர் ராகுல் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவங்களைப் போன்றகளால் தான் இந்த நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆகி போய்க்கொண்டிருந்தது. அது இப்பொழுது தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் இவனுக்கு எங்கே தெரியப்போகிறது. வாயைத் திறந்தால் பொய்.


Sridhar
நவ 09, 2024 11:47

இந்த விஷயம் ஒண்ணாங்கிளாஸ் பசங்களுக்கு கூட தெரியுமே? அதுனாலதானே நேரு தொடங்கி மன்மோகன் வரை காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் முடங்கி கிடந்தது? கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சிகளை ஏன் அதற்குமுன் காண முடியவில்லை? பணமதிப்பிழப்பின்போது கருப்பு பண முதலைகளும் திருட்டு அரசியல்வாதிகளும் தலையருந்த கோழியைப்போல அங்குமிங்கும் அலைந்து செய்வதறியாது முழித்ததை நாம் கண்கூட பார்த்தோம். இதனால் சிறுகுறு தொழில் செய்வோர் எப்படி பாதிக்கப்படுவார்கள்? நேர்மையா இருந்தவர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் செலுத்தி வங்கிகள் மூலம் தங்கள் வியாபாரத்தை பணபரிவர்தனையை தொடர்ந்தார்கள். அந்த நடவடிக்கையால் எரிச்சலடைந்தவர்கள் முற்றிலும் திருடர்களே அந்த எரிச்சல் ஏழு ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை தொடருகிறது என்றால், நஷ்டம் மிகப்பெரிதாக இருந்திருக்கவேண்டும். அதையும் தாங்கிக்கொண்டு இன்றுவரை குரல் ஒலிக்கிறது என்றால், அடித்த கொள்ளைகளின் அளவை நாம் புரிந்துகொள்ளலாம்


sankar
நவ 09, 2024 11:23

தம்பி இத்தாலிய பத்தி பேசுது


Narasimhan
நவ 09, 2024 11:23

விரட்டப்படவேண்டிய முதல் கொள்கை. காந்தி என்ற பெயரை வைத்து மக்களை ஏமாற்றும் குடும்பத்தினரையும்தான்


கண்ணன்
நவ 09, 2024 10:51

பள்ளிப்படிப்பையே சரியாக முடிக்காதவரின் உளறல்கள்


JAYARAMAN
நவ 09, 2024 10:20

இந்த ஒரு விஷயத்தில் இவர் சொல்வது உண்மை. அதனால்தான் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் பிஜேபிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்.


karthik
நவ 09, 2024 09:21

அப்படிதான்டா கடந்த 60 வருஷமா நாட்டை குடும்பம் சீரழித்துவிட்டது.


Dharmavaan
நவ 09, 2024 08:24

ராகுல் குடும்பம் நாட்டை பாழ் படுத்தியது ... நல்லதை விரும்பமாட்டார் செய்ய மாட்டார்


புதிய வீடியோ