உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ்காரர் ஆனார் இருளர் இன வாலிபர்

போலீஸ்காரர் ஆனார் இருளர் இன வாலிபர்

பாலக்காடு; கேரள மாநிலம், அட்டப்பாடி சோலையூர் நல்லசிங்கா பகுதியைச் சேர்ந்த மருது - -சிவால் தம்பதியின் மகன் மணி, 37. இருளர் சமுதாயத்தை சேர்ந்த இவர், பி.எஸ்சி., பட்டதாரி. தகுந்த வேலை கிடைக்காததால் கல் உடைப்பு, கட்டுமான தொழில், பிளம்பிங் போன்ற வேலைகளுக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில், இவர் போலீசாக வேண்டும் என்ற தன் நீண்ட நாள் கனவை நனவாக்கி உள்ளார். வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் இதற்காக கடுமையாக உழைத்த மணி, தற்போது போலீஸ்காரராகி யுள்ளார். மலப்புரம் போலீஸ் முகாமில் பயிற்சி முடித்த பின் நடந்த அணிவகுப்பை காண, நல்லசிங்க ஊரே திரண்டு வந்திருந்தது. மணி கூறியதாவது: கடந்த, 2010 முதல் தேர்வுகள் எழுதி வருகிறேன். எனினும், தற்போது தான் அரசு வேலை என்ற கனவு நனவானது. இரவு நேரங்களில், 'ஆன்லைன்' வகுப்புகளில் படித்தேன். வாழ்வாதாரம் தேடி பல வேலைகள் செய்தேன். போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயற்சியை நிறைவு செய்து, போலீஸ்காரர் ஆனது, பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. எங்களது சமுதாயத்திலிருந்து மேலும் பலர் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை