உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியுடன் பேசிய இளைஞர் அடித்து கொலை

சிறுமியுடன் பேசிய இளைஞர் அடித்து கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், ஹோட்டல் ஒன்றில், 17 வயது சிறுமியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞரை அடித்து, இழுத்துச் சென்ற கும்பல் கொடூரமாக தாக்கிக் கொன்றது. மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் ஜாம்னரில் வசித்து வந்தவர் சுலேமான் கான், 20,. இவர் இரண்டு தினங்களுக்கு முன் தன் தோழியான 17 வயது சிறுமியுடன், ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 10 பேர் அங்கு வந்தனர். சுலேமான் கானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து வெளியே இழுத்துச் சென்றனர். ஆறு முதல் ஏழு மணி நேரம் இடைவிடாமல் சுலேமானை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. விரல் நகங்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று, வீட்டின் முன் வைத்து தாக்கியுள்ளனர். அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது. தலை உட்பட உடலின் முக்கிய பாகங்களில், படுகாயம் அடைந்த சுலேமானை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஜாம்னரில் பதற்றம் ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், காதல் விவகாரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்பகை காரணமாகவும் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
ஆக 15, 2025 12:57

லவ் ஜிகாத் பிரச்னை.


என்னத்த சொல்ல
ஆக 15, 2025 12:06

திருட்டு திராவிட ஆட்சியில்.... ஓ சாரி, இது நடந்தது மஹாராஷ்ட்ராவா...


Rathna
ஆக 15, 2025 12:06

கனிவாக பேசுகிறான். காதல் வலையில் வீழ்த்தி கொலை செய்து பிரிட்ஜில் வைத்துவிடுகிறான்


கலைஞர்
ஆக 15, 2025 11:52

லவ் ஜிகாத்


தமிழ்வேள்
ஆக 15, 2025 11:48

இஸ்லாமிய மக்கள் செய்த பயங்கரவாதம் அவர்களையே திருப்பி தாக்குகிறது.... ஹிந்து பெண்களை காதலித்தால் கல்யாணம் செய்தால் நிச்சயம் இஸ்லாத்துக்கு அந்த பெண்& உறவினர்கள் கூண்டோடு மாறவேண்டும் என சித்திரவதை செய்வது..நிக்கா ஹலாலா பெயரால் கூட்டு வன்புணர்வு, பிறகு ஐஎஸ்ஐஎஸ் க்கு பாலியல் அடிமைகளாக கடத்தி விற்பது... மீண்டும்..ரிபீட்..என்ற பழக்கம் காங்கிரஸ் அரசு பாதுகாப்பு பெற்றது என்பதற்காக இப்போது கூட செய்தால் இதுதான் கதி....


அப்பாவி
ஆக 15, 2025 10:51

ஒரு மாசம்.பொறுங்கள். அடிச்சவங்க எல்லோரும் நிரபராதிகள்னு கோர்ட் விடுதலை செஞ்சுறும். அவரே நகங்களை பிடுங்கிக்கிட்டாருன்னு கருத்தும் தெரிவிச்சுரும்.


Kasimani Baskaran
ஆக 15, 2025 03:57

லவ் ஜிகாத் போல தெரிகிறது.


Sangi Mangi
ஆக 15, 2025 11:20

இது லவ் ஜிகாத் இல்ல லவ் சாங்கி, அடிபட்டு செத்தவன் முஸ்லீம், அப்படினா அடித்தவன் உன்னை போல ஒரு ஆளு தானே? சொல்லு ஊசி போன உளுந்துவடை,,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை