மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ
07-May-2025
காஜியாபாத்,:உத்தர பிரதேசத்தில், ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 19 வயது உறவினரை போலீசார் தேடுகின்றனர்.உ.பி., மாநிலம் காஜியாபாத் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபரின் மனைவி சமீபத்தில் மரணம் அடைந்தார்.இதையடுத்து, தன் உறவினருக்கு போன் செய்து, அவருடைய 13 வயது மகளை சமையலில் உதவி செய்ய தன் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டார்.உறவினரும் தன் மகளை அனுப்பி வைத்தார். அந்தச் சிறுமி, உறவினரான வாலிபர் வீட்டிலேயே சில நாட்களாக் தங்கி இருந்தார்.சம்பவத்தன்று, அவரது பெற்றோர் தூங்கிய பின், சிறுமி தனியாக தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த வாலிபர், சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டுபிடித்தார்.இதையடுத்து, பெற்றோர் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.
07-May-2025