உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அமலாகும் புதிய மாற்றம்: கட்டாயமாகிறது ஆதார் சரிபார்ப்பு

ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அமலாகும் புதிய மாற்றம்: கட்டாயமாகிறது ஆதார் சரிபார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்.1 முதல் நடைமுறைக்கு வருகிறது.ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோர்களில் பெரும்பான்மையோர் ஐஆர்சிடிசி என்ற இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியன் ரயில்வே அங்கீகரித்த அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி (App) மூலமும் டிக்கெட்டுளை முன்பதிவு செய்யலாம் என்றாலும் அதிகமானோரின் தேர்வு என்பது ஐஆர்சிடிசி ஆக உள்ளது.இந் நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முதல் 15 நிமிடங்களுக்குள் ஆதார் விவரம் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.இந்த புதிய விதியானது அக்.1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்னதாக, இவ்விதி, தட்கல் முறையிலான முன்பதிவுக்கு மட்டுமே இருந்தது. தட்கல் ஆன்லைன் முன்பதிவின் போது பயணிகள் கணக்கு ஆதாருடன் சரிபார்க்கப்படும். அப்படி சரிபார்க்கப்படவில்லை என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Baskar
செப் 16, 2025 13:04

Unreserved quota எடுக்கவும்


Gokul Krishnan
செப் 16, 2025 12:52

ஐ ஆர் சி டி சி தளமாக இருக்கட்டும் வருமான வரி தாக்கல் வலைதளம் தொழிலாளர் வைப்பு நிதி தளம் எதுவாக இருந்தாலும் பயணிகளை டார்ச்சர் செய்வது தான் இந்த அரசின் சாதனை


Ramesh Sargam
செப் 16, 2025 12:03

நான் ஏற்கனவே தட்கல் பதிவுக்கு என் ஆதார் இணைத்துள்ளேன். மீண்டும் இணைக்கவேண்டுமா?


Sudarsan Ragavendran
செப் 16, 2025 12:43

தேவை இல்லை. ஏனெனில் நீங்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் மூலமே இதை பதிந்து உள்ளீர்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 16, 2025 11:55

ஒரு இரயிலுக்கும் மற்றொரு இரயிலுக்கும் இடையே குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும். பயணிகள் இரயில்களுக்கு இடையில் தான் சரக்கு இரயில்களையும் இயக்க வேண்டும். ஆகவே ஒரு வழித்தடத்தில் குறிப்பிட்ட அளவு இரயில்கள் தான் இயக்க முடியும். இல்லை என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதே போல் அதிக இரயில்கள் இயக்க வேண்டும் என்றால் மாநில அரசும் தரைவழி போக்குவரத்து சீர் செய்ய வேண்டும். வரும் இரயில்கள் ஏற்ப பயணிகள் தங்களுடைய இடங்களுக்கு செல்ல பேருந்து ஆட்டோ டாக்ஸி கார் போன்ற வாகனங்கள் பயன்படுத்துவார்கள். அந்த வாகனங்கள் நிற்பதற்கும் மற்றும் ஒரே சமயத்தில் பல வாகனங்கள் இரயில்வே வளாகத்தை விட்டு வெளியேற நல்ல சாலை வசதி செய்து தர வேண்டும். போக்குவரத்து ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியம். ஆகவே இந்த கட்டமைப்புகள் மாநில அரசு தான் மக்களுக்காக செய்து தர வேண்டும். மக்கள் தொகை வேறு நமது நாட்டில் அதிகம். தற்போது இருவழி இரயில்வே தண்டவாளங்கள் அனைத்தும் நான்கு வழி தண்டவாளங்களாக மாற்றினால் மட்டுமே கூடுதல் இரயில்கள் இயக்கி மக்கள் தேவையை ஒரளவு சரி செய்ய முடியும். கேரளா போன்ற மாநில மக்கள் தங்கள் வசதிக்கேற்ப இரயில்கள் இயக்கத்தை மாற்றி வைத்துக் கொண்டு உள்ளார்கள். இதற்கு அங்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு இருப்பதால் கோவை சந்திப்பில் ஏறும் பயணிகள் காலதாமதமாக வரும் கேரளாவில் இருந்து கிளம்பும் இரயிலுக்காக சில சமயம் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. இது போன்ற சுயநல தன்மைகளை விட்டால் தான் இரயில்கள் இயக்கத்தை மேம்படுத்த முடியும். மேலும் நமது எம்பி எம்எல்ஏக்களும் சுய நலமின்றி பொது நல நோக்கமே முக்கியமாக கொண்டு இரயில்வே நிர்வாகத்துடனும் மாநில அரசு மத்திய அரசுக்கு பாலமாக இருந்து இரயில்கள் சேவையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது கேரளா எம்பிக்கள் எம்எல்ஏக்கள் போன்று கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து மக்கள் நன்மையே பெரிதாக நினைத்து பணியாற்ற வேண்டும். வெற்றிகரமாக நிறைவேற்றிய இரயில்வே திட்டத்தை வெற்று விளம்பரம் சுய தம்பட்டம் அடிக்க பயன்படுத்த கூடாது. இதை கேரளா எம்பி எம்எல்ஏக்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 16, 2025 10:29

தேவையான ரயில்களை இயக்கினால் இது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை. ஆனால், அதைவிட்டுவிட்டு தேவையற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதுதான் நம்மவர்களின் வேலை. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு போதுமான ரயில்களை இயக்குவதில் நிறைய அரசியல் உள்ளது. லஞ்ச ஊழல்களும் புகுந்து விளையாடுகிறது. மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், ஊழலற்ற, நேர்மையான ஆட்சி என்று கூறும் மோடிஜிக்கு தெரிந்துதான் இது நடக்கிறதா என்று தெரியவில்லை .


Natarajan Ramanathan
செப் 16, 2025 11:13

தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்குவதற்கு ஆம்னி பேருந்து முதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால்......


Naga Subramanian
செப் 16, 2025 09:39

ஆதார் கார்டோடு வாக்காளர் அட்டையையும் இணைக்க வேண்டும்.


R Hariharan
செப் 16, 2025 09:23

இது தேவை அற்றது. ஏற்கெனவே தட்கல் புக்கிங் ஆதார் மேட்ச் ஆகவில்லை. பல தடவை ரேகிச்டேர் செய்தும் ஆதார் அண்ட் இரசட்ச ரெஜிஸ்டெரெட் நமே மேட்ச் ஆகவில்லை என்று வருகிறது. முதலாளியில் ஆதார் முறையில்லாமல் வழங்க பட்டுஇருக்கு.


KavikumarRam
செப் 16, 2025 10:22

முதலில் உங்கள் ஆதாரில் என்ன பிரச்சினை என்று உங்கள் அருகில் இருக்கும் ஆதார் ஈசேவை மைய்யத்தில் சென்று சரிசெயுங்கள். ஆதரில் இருக்கும் அதே பெயரில் உங்கள் டிக்கெட் இருந்தால் போதும். எதுக்கெடுத்தாலும் நொய்நொய்ன்னுக்கிட்டு. ரயில்வே ஐஆர்சிடிசி யிலிருந்து விமான ஆப் டிஜியாத்ரி வரைக்கும் பயணிகளைக்கு மிக உதவியாக இருக்கிறது. பயன்படுத்த தெரியாம எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டு ஒரு கூட்டம் இப்படித்தான் திரிந்து கொண்டு இருக்கிறது.


Saravanan R
செப் 16, 2025 10:53

ஐஆர்ஸிடிஸி அக்கெளண்டில் பெயரை ஒரு முறை திருத்த முடியும். முயன்று பாருங்கள். ஆதாரில் உள்ளபடியே இதிலும் பெயரும் அலைபேசி எண்ணும் இருத்தல் வேண்டும். அப்படியிருந்தால் பதிவு செய்யப்பட்டுவிடும். அவ்வாறு இணையத்தில் பெயரைத் திருத்த முடியவில்லையென்றால், இரயில்ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் அக்கெளண்டில் உள்ளீடு செய்து, அதில் பெயர் திருத்தம் செய்து பாருங்கள். ஆதாரில் உள்ளபடியே பெயரைத் திரு்த்திவிட்டால், நிச்சயம் ஆதாரை இணைப்பதில் சிரமம் இருக்காது. நான் இவ்வாறு செய்து ஆதாரை இணைத்துக் கொண்டேன்.


V Venkatachalam
செப் 16, 2025 18:44

ஆதாரில் உள்ள பெயர் ஸ்பெல்லிங் உட்பட இணைக்கப்பட்ட போன் எண் இவையே ஐ ஆர் சி டி சி தளத்திலும் உபயோகிக்க வேண்டும். என்னுடைய ஐ ஆர் சி டி சி கணக்கு, வங்கி கணக்குகள் வருமான வரி தளம் எதிலும் பிரச்சினை இல்லை. ஆதாரில் திருத்தம் தேவை என்றால் முதலில் அதை சரி செய்து கொள்ளவும்.


ديفيد رافائيل
செப் 16, 2025 09:15

கடைக்காரங்க தான் advance ticket book பண்ணி வச்சு sale பண்றானுக


ديفيد رافائيل
செப் 16, 2025 09:14

கடையில் irctc website மூலம் ticket பண்றாங்க, அவங்களுக்கு இது பொருந்துமா


சமீபத்திய செய்தி