மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு நன்றி
30-Jun-2025
புதுடில்லி : திறன் மேம்பாட்டு திட்டத்தில் பலன்பெற, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.'மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய செயல் திட்டம்' கடந்த 2015 மார்ச்சில் மத்திய அரசால் துவக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தவும், மிகச்சரியான வேலைவாய்ப்பை பெறவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வி பயிற்சி அளிப்பதை நோக்கமாகவும் கொண்டதே இத்திட்டம். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் பலன்களை பெற ஆதாரை கட்டாயமாக்கி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
இந்த திட்டத்தின் கீழ் பணப்பலன்கள், போக்குவரத்து படி, தங்குமிடம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாவிட்டாலும், தகுதியுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் திறன் மேம்பாட்டு பலன்களை பெற முடியும்.ஆதார் இல்லாத தகுதியுள்ள குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதலுடன் ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் கிடைக்கும் வரை பிறப்பு சான்று, பள்ளி ஆவணங்கள், சட்டப்பூர்வமாக தத்தெடுத்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அளித்து பலன்களை பெறலாம். கைரேகை அழித்த வர்கள், பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை கடவுச்சொல்லை வைத்து பலன்களை பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தேவை குறித்து ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30-Jun-2025