வேட்பாளர் முதல் பட்டியல் ஆம் ஆத்மி வெளியீடு
விக்ரம் நகர்:டில்லி சட்டசபை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி வெளியீட்டுள்ளது.மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களுக்கு செய்த சேவை, மக்களின் கருத்து, வெற்றி வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவர் என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்குப் பின் டில்லி சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை கட்சி வெளியிட்டுள்ளது. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஆறு தலைவர்களுக்கு முதல் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வேட்பாளர்
ரோஹ்தாஸ் நகர் சரிதா சிங்பதர்பூர் ராம் சிங் நேதாஜிகோண்டா கௌரவ் சர்மாகரவால் நகர் மனோஜ் தியாகிவிஸ்வாஸ் நகர் தீபக் சிங்கால்*பா.ஜ.,வில் இருந்து வந்தவர்கள்சத்தர்பூர் பிரம் சிங் தன்வார்கிராரி அனில் ஜாலக்ஷ்மி நகர் பிபி தியாகி* காங்கிரஸ் இருந்து வந்தவர்கள்சீலம்பூர் சுபைர் சவுத்ரிசீமாபுரி வீர் சிங் திங்கன்மத்தியாலா சோமேஷ் ஷோக்கீன்