உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ., பஞ்சாபில் திடீர் ராஜினாமா

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ., பஞ்சாபில் திடீர் ராஜினாமா

சண்டிகர்:பஞ்சாபில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அன்மோல் ககன் மான், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநிலம் கரார் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக பதவி வகிப்பவர் அன்மோல் ககன் மான், 35. இவர், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, பஞ்சாப் சட்டசபை சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வானுக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.அதைத் தொடர்ந்து, சமூகவலைத்தளத்தில் அன்மோல் வெளியிட்டு உள்ள பதிவு:என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனால், அரசியலில் இருந்து முற்றிலும் வெளியேற முடிவு செய்துவிட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆம் ஆத்மி கட்சிக்கு என் வாழ்த்துகள். பஞ்சாப் அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பிரபல பாடகியான மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த அன்மோல் ககன் மான், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் இளைஞர் அணி இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 2022ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், கரார் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அன்மோல், சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் ரஞ்சித் சிங் கில்லை விட, 37,885 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சுற்றுலா மற்றும் கலாசாரம், முதலீட்டு மேம்பாடு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டபோது, அன்மோலும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.அன்மோலின், 'சூட்', 'கைண்ட் பர்பஸ்' மற்றும் 'ஷெர்னி' உள்ளிட்ட பாடல்கள் மிகப் பிரபலம் அடைந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி