உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மியின் மகேஷ் தேர்வு

டில்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மியின் மகேஷ் தேர்வு

புதுடில்லி, டில்லியில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ் குமார் கிஞ்சி வெற்றி பெற்றார். டில்லி மாநகராட்சியில் நீண்ட இழுபறிக்கு பின்னர், மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் நேற்று நடந்தது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேவ்நகர் கவுன்சிலர் மகேஷ் குமார் கிஞ்சியும், பா.ஜ., சார்பில் ஷகுர்பூர் கவுன்சிலர் கிஷண் லாலும் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், மகேஷ் குமார் 133 ஓட்டுகளும், கிஷண் லால் 130 ஓட்டுகளும் பெற்றனர். மகேஷ்குமார் பெற்ற ஓட்டுகளில் இரண்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மகேஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், டில்லியின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல் மேயர். துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மியின் ரவீந்திர பரத்வாஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த பா.ஜ., கவுன்சிலர் நீதா பிஷ்ட் கடைசி நேரத்தில் தன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி