உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ஆம் ஆத்மி ஹீரோ; ஹரியானாவில் ஜீரோ

காஷ்மீரில் ஆம் ஆத்மி ஹீரோ; ஹரியானாவில் ஜீரோ

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், டோடா தொகுதியில் வென்று, தன் வெற்றிக் கணக்கை ஆம் ஆத்மி துவங்கி உள்ளது. அதே சமயம், கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில், அக்கட்சி சொதப்பி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் டோடா தொகுதியில் போட்டியிட்ட மெஹ்ராஜ் மாலிக், 4,538 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., - தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை தோற்கடித்துள்ளார். இதன் வாயிலாக, ஜம்மு - காஷ்மீரில் ஆம் ஆத்மியின் வெற்றிக் கணக்கை அவர் துவக்கி வைத்துள்ளார். இவர், 2020ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2014 சட்டசபை தேர்தலில், டோடா தொகுதியை பா.ஜ., கைப்பற்றியது. ஜம்மு - காஷ்மீரில் ஆம் ஆத்மியின் எதிர்பாராத வெற்றி, காங்., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஹரியானாவில் ஜீரோ

ஜம்மு - காஷ்மீரில் வெற்றிக் கணக்கை ஆம் ஆத்மி துவங்கியிருந்தாலும், கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.மாநிலம் முழுதும் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தும், ஆம் ஆத்மிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் ஒத்துப் போகாததே அக்கட்சி தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
அக் 09, 2024 14:46

பிறந்த ஊரிலேயே விலை போகாத மாடு .


rao
அக் 09, 2024 07:25

In the next Delhi election ZERO.


Dharmavaan
அக் 09, 2024 06:45

ராகுல்கான், கெஜ்ரிவால் இரண்டும் திருடர்கள் இவ்வளவு வந்ததே தவறு


Palanisamy Sekar
அக் 09, 2024 05:46

இந்த வெற்றி என்பது கட்சிக்கான வெற்றியே அல்ல. அது அந்த தனி நபரின் செல்வாக்கிற்கு கிடைத்த வெற்றி. தொகுதியில் செல்வாக்கான நபராக இருந்திருந்தால் என்பதால்தான் வெற்றி சாத்தியமாகையாதே தவிர இது கெஜ்ரிவாலின் செல்வாக்கிற்கு கிடைத்த வெற்றியே அல்ல. பாஜக இதுபோன்ற தொகுதியில் செல்வாக்குள்ள நபர்களை தங்கள் கட்சிவசம் இழுத்துக்கொள்வது தான் கட்சிக்கான செல்வாக்கு உயரும். இருந்தாலும் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவுக்கு இந்த அளவுக்கு கிடைத்துள்ளதற்கு காரமும் இஸ்லாமிய பெண்களை காத்திட்ட தலாக் தடை தான் முதற்காரணம். இதனை பலகட்சிகளின் தலைவர்களுக்கு கிடைத்த ஷாக் நியூஸ். பாஜக மீதான இஸ்லாமியர்களிடம் உள்ள களங்கமான எண்ணங்களுக்கு கிடைத்த வெடி தான். இனியேனும் உண்மையை தெரிந்துகொண்டு பாஜகவை இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும்.


Kasimani Baskaran
அக் 09, 2024 05:39

இனிக்க இனிக்க செயல்பட வேண்டுமே அன்றி இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றக்கூடாது. அதில் கெஜ்ரி மன்னர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை