உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மடாதிபதி ஆரூடம்

மடாதிபதி ஆரூடம்

விஜயபுரா: ''அமைச்சர் எம்.பி.,பாட்டீல் வருங்காலத்தில் முதல்வர் ஆவார்,'' என, மடாதிபதி சிவாச்சார்யா சுவாமி ஆரூடம் கூறி உள்ளார்.கர்நாடகா அரசின் ஐந்து வாக்குறுதிகள் தொடர்பான நிகழ்ச்சி, விஜயபுராவில் நேற்று நடந்தது. ஜமகண்டி வீரசைவ பஞ்ச மசாலி மடத்தின் மடாதிபதி சிவாச்சார்யா சுவாமிகள் பேசுகையில், ''அரசின் ஐந்து வாக்குறுதிகளால், மக்கள் பயனடைகின்றனர். நமது சமூகத்தை சேர்ந்த, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், விவசாயிகள் கஷ்டத்தை தீர்த்து வைக்கிறார். வருங்காலத்தில் அவர் கண்டிப்பாக முதல்வர் ஆவார்,'' என்றார்.கர்நாடகாவில் ஏற்கனவே முதல்வர் பதவிக்கு, சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் இடையில் மோதல் நிலவுகிறது. 'சட்டசபை தேர்தலின்போது, லிங்காயத் சமூகத்திற்கு முதல்வர் பதவி தர வேண்டும். எனக்கும் முதல்வர் ஆகும் தகுதி உள்ளது' என, எம்.பி.பாட்டீல் கூறி இருந்தார். தற்போது அவர் முதல்வர் ஆவார் என, மடாதிபதி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ