உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியை கடத்தி பலாத்காரம் தலைமறைவு குற்றவாளி கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம் தலைமறைவு குற்றவாளி கைது

புதுடில்லி: பீகாரில் 14 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் டில்லியில் கைது செய்யப்பட்டார்.பீகார் மாநிலம், முசாபர்பூரில் 2021 அக்டோபரில் 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டாள். பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர்.அவரை பற்றி தகவல் தெரியாததால், முசாபர்பூர் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அவர் பற்றி விபரங்களை அனைத்து மாநிலங்களுக்கும் முசாபர்பூர் போலீசார் அனுப்பி இருந்தனர்.இந்நிலையில் டில்லியில் அந்த குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் 24 வயது இளைஞரை கைது செய்தனர்.தன்னை போலீசார் கண்காணிப்பதை அறிந்து, அந்த இளைஞர் அடிக்கடி தன் இடத்தை மாற்றிக் கொண்டும் உருவத்தை மாற்றிக் கொண்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக சுற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.டிசம்பர் 31ம் தேதி அவர் கைது செய்யப்பட்டது குறித்து முசாபர்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ