உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாகவாரா - ஹெப்பாலில் விபத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகவாரா - ஹெப்பாலில் விபத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கெம்பாபுரா: பெங்களூரு ஹெப்பால் - நாகவாரா இடையே மெட்ரோ ரயில் தடுப்பில் மோதி, சாலை டிவைடரில் ஏறி சரக்கு லாரி குறுக்கே நின்றதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.பெங்களூரு நாகவாராவில் இருந்து நகரை நோக்கி 10 சக்கரம் கொண்ட சரக்கு லாரி நேற்று காலை 7:00 மணியளவில் வந்து கொண்டிருந்தது. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. கெம்பாபுரா அருகே லாரி வந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த மெட்ரோ தடுப்பு மீது லாரி மோதியது.ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி, சாலை டிவைடரில் ஏறி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் ஹெப்பாலில் இருந்து ராமமூர்த்திநகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சில பைக் பயணியர், சாலையின் குறுக்கே நின்றிருந்த லாரியின் அடியில், வாகனத்துடன் உள்ளே நுழைந்து, மறுபக்கம் சென்றனர். பல மணி நேரத்துக்கு பின், இரு ஜே.சி.பி., இயந்திரத்துடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. காலையில் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்ல இருந்தோர், விடுமுறை எடுத்து விட்டு, வீட்டுக்கு போய் விட்டனர்.போக்குவரத்து இணை கமிஷனர் அனுசேத் கூறுகையில், ''விபத்தினால், 1.4 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ''இரண்டு ஜே.சி.பி., வாகனங்களால், லாரி அப்புறப்படுத்தப்பட்டது. காலை 9:00 மணியளவில் மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் சென்றன,'' என்றார்.� லாரி விபத்தால் நாகவாரா மேம்பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். �  பொறுமை இழந்த இரு சக்கர வாகன ஓட்டி, லாரியின் கீழ் பகுதியில் புகுந்து வெளியே வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை