உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் விபத்து; கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி

குஜராத்தில் விபத்து; கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தினர் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானது. இதையடுத்து, கார்கள் தீப்பற்றிக்கொண்டன. விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணி மேற்கொண்டனர்.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.போலீசார் கூறுகையில், ''இன்று பிற்பகல் 3:30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், காரில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

nisar ahmad
ஆக 18, 2025 11:51

எணக்கு 3000. நினைவுக்கு வறுகிறது


Padmasridharan
ஆக 18, 2025 01:56

அதிகாலை, இரவு ப்ரயாணங்கள் மட்டுமல்ல, பிற்பகலிலும் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன சாமி. இதற்கும் தூக்க கலக்கமாகவும் இருக்கலாம். மற்ற காரணங்களையும் அறிய வேண்டும். ஓட்டுநர் குடிப்பவரா, எத்தனை வருடமாக ஓட்டுகிறார். எல்லோர்க்கும் பணத்தை வாங்கி லைசென்ஸ் கொடுப்பதனால் விபத்துக்கள் அதிகமாகியுள்ளது. சிறு சந்துகளில் கூட ப்ரேக்ஸ் உபயோகிக்காமல் ஹார்ன் அடித்து நடப்பவர்களையும் மிதிவண்டிகள் ஓட்டுபவர்களை பயமுறுத்துவதும், ஒரு பக்க லைட் இண்டிகேட்டரை பயன்படுத்தி இன்னொரு பக்கம் திரும்புவதும் நடக்கின்றது. ஓவர்டேக்கிங் போன்றவையும் விபத்தின் காரணங்கள்.


அப்பாவி
ஆக 17, 2025 22:39

கதி சக்தி ஜிந்தாபாத்... அல்பாயிசிலேயே போயிடறாங்க..


K Jayaraman
ஆக 17, 2025 21:22

Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும். இது காலத்தின் கட்டாயம்.


முக்கிய வீடியோ