உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு; இடைக்காலத் தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு; இடைக்காலத் தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 44.56 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rbu19q3i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், 2006-2011ல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சம் சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.

வழக்கு

இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, மீண்டும் விசாரணை நடத்தவும், விசாரணையை தினமும் நடத்தி விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டது.

இடைக்கால தடை

இதனை எதிர்த்து, அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், எதிர் மனுதாரர்கள் 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Kumar Kumzi
செப் 07, 2024 11:47

திருட்டு திராவிஷ மாடலின் அடிமை


kumar
செப் 07, 2024 01:21

உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கேள்வி இருந்தால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமல் படுத்துவதற்கு தடை விதித்து மேல் முறையீடுக்கு அனுமதிக்கலாம் . உச்ச நீதி மன்றம் விசாரிக்கவே கூடாது என்று , அதுவும் இந்த ஊழல் பெருச்சாளிகளின் வழக்குகளை எடுக்க கூடாது என்று உத்தரவிடுவது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மையையும் திறமையயையும் கேள்விக்குறியாக்குகிறது உச்ச நீதிமன்றம் . ஊழலுக்கு துணை போகும், ஊழலை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது . வருத்தத்துக்கு உரிய தீர்ப்பு .


SUBRAMANIAN Naharaj
செப் 06, 2024 23:16

தடை எத்தனை காலத்திற்கு? காலவரையின்றி யா?


SUBRAMANIAN Naharaj
செப் 06, 2024 23:14

தமிழக அரசியல்வாதிகள் மிக உத்தமர்கள்.வழக்கை ஒத்தி வைப்பதன் காரணம் என்ன? சுப்ரீம் கோர்ட் பதில் சொல்ல வேண்டும்


Anonymous
செப் 06, 2024 22:07

இதில் ஆச்சரிய பட என்ன இருக்கிறது? எப்போதும் போல இப்போதும்.


ஆரூர் ரங்
செப் 06, 2024 21:39

A1 சுப்ரீம் கோர்ட்.


இராம தாசன்
செப் 06, 2024 21:11

அது எப்படிங்க தமிழக அரசியல் வியாதிகளின் வழக்கை மட்டும் உடனுக்குடன் விசாரிக்குது உச்ச நீதி மன்றம்? விசாரணைக்கு தடையும் கொடுக்கிறார்கள் - அவர்களும் RSB சொன்ன நீதிபதிகளோ?


Ramesh Sargam
செப் 06, 2024 21:09

இப்படி சுப்ரீம் கோர்ட்டே தடை விதித்தால், அது குற்றம் செய்தவர்களுக்கு உதவி செய்வதுபோல தெரியவில்லையா...? இன்று மற்றொரு செய்தி படித்தேன் - உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே தீரணும் ரூ.20 ரூபாய் லஞ்ச வழக்கில் 34 ஆண்டுக்கு பிறகு வாரண்ட். - வெறும் ரூ. 20 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கே, 34 ஆண்டுகள் கழித்து வாரண்ட். இப்படி நீதிமன்றங்கள் செயல்பட்டால், குற்றவாளிகளுக்கு என்று தண்டனை கிடைக்கும்? என்று நீதி நிலைநாட்டப்படும்?


பேசும் தமிழன்
செப் 06, 2024 20:34

ஆக மொத்தம்... குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க கூடாது என்பதில்.... கோர்ட் மிகவும் மும்முரமாக இருக்கிறது போல் தெரிகிறது.


நசி
செப் 06, 2024 19:56

கண்ணதாசன் பாட்டில் " மெட்றாஸ் நல்ல மெட்றாஸ் ..நாடு கெட்ட போனதற்கு நாகரீகம் அடையாளம்.....ஆனா இப்ப தமிழ் நாட்டில் ஊழல் பெருகி வடியாத வெள்ளமா ஒடுகிறதே இதற்கு பிறழம் நீதியே காரணம்....மனு நீதி சோழன் ..கீழடி கீழே சென்று விட்டான்...பரம்பொருள் காப்பாத்துவாரா??