உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது

டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த, வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட வெளிநாட்டினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது வங்க தேசத்தினர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை குழப்பும் வகையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு பிடிபட்ட வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட 29 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rathna
ஜூலை 07, 2025 18:35

பீகார் தேர்தலில் எலெக்க்ஷன் கமிஸன் கேட்கும் வேட்பாளர் சம்பந்தமான டாகுமென்டுகளுக்கு போலி செகுலர் கட்சிகள் பங்களாதேஷிகளுக்கு ஆதரவாக போடும் கூப்பாடு மிக கேவலம்.


Oviya Vijay
ஜூலை 07, 2025 18:18

இவனுங்க கை மற்றும் காலை சங்கிலியால் கட்டி நடுக்கடலில் தள்ளி விடவேண்டும். அதைப் பார்த்த எவனும் எல்லை தாண்ட யோசிக்க வேண்டும்


Nada Rajan
ஜூலை 07, 2025 17:29

சட்டவிரத குடியேற்றம் தடுக்கப்பட வேண்டும்


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2025 16:44

தவறான செய்தி இது, வெறும் 18 பேர் மட்டும் தானா வங்க தேச சட்டவிரோத குடியேறிகள் குறைந்தது 18,000 பேர் இருப்பர் டில்லியில் மட்டும். There are at least 20 million Bangladeshi illegal immigrants 20–40 times more living in India, making India the country with the largest number of illegal immigrants in the world.


சமீபத்திய செய்தி