உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் நடவடிக்கை; பார்லி., முடங்கிய கோபத்தில் ஓம்பிர்லா கடும் எச்சரிக்கை!

இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் நடவடிக்கை; பார்லி., முடங்கிய கோபத்தில் ஓம்பிர்லா கடும் எச்சரிக்கை!

புதுடில்லி: உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திச் செல்லக்கூடாது. இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால், நான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கூடிய முதல் நாளில் இருந்தே, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தொடர்ந்து மூன்றாவது நாளாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது. லோக்சபாவில் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர் கூறியதாவது:உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுப்பதற்காக, நீங்கள் செயல்பட வேண்டும். நீங்கள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும்.ஆனால் நீங்கள் பார்லிமென்டில் தெருமுனையில் நடப்பதை போல் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திச் செல்லக்கூடாது. இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால், நான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் லோக்சபாவை நாளை காலை 11:00 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMESH
ஜூலை 24, 2025 13:03

தமிழ்நாட்டின் சார்பாக......கேண்டினில் பஜ்ஜி போண்டா சாப்பிடும் நபர்கள்.....பாஜா ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.....


D Natarajan
ஜூலை 24, 2025 06:31

சும்மா எச்சரிக்கை மட்டும் போதாது . நடவடிக்கை தேவை. இந்த சபாநாயகர் வெறும் பேச்சு மட்டும் தான். ஒரு 20 ம்பி க்களை சபையை விட்டு இந்த தொடர் வரை நீக்க வேண்டும். சஸ்பெண்ட் காலத்தில் எந்த பலனையும் அனுபவிக்க விடக்கூடாது. தேவை நடவடிக்கை, எச்சரிக்கை அல்ல


அப்பாவி
ஜூலை 24, 2025 06:25

பேசாம ஆன்லைனில் கூட்டத்தை நடத்துங்க. பிரதமர் ஜாலியா டூர் போயிட்டாரு. கட்டிடமே தண்டம்.


c.mohanraj raj
ஜூலை 24, 2025 04:19

ஓம் பிர்லா போல அமைதியான ஆட்களை பார்லிமென்ட் ஸ்பீக்கராக போடக்கூடாது கடுமையா ஆட்களை நியமிக்க வேண்டும் அப்பொழுதுதான் அடங்குவார்கள் ஒவ்வொருவரையும் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்தால் தானாக அடங்குவார்கள்


Kasimani Baskaran
ஜூலை 24, 2025 04:06

தொழில் நுணுக்கத்தை வைத்து கோசம் போடுவோரது சத்தத்தை நீக்க முடியும். அதை செய்தால் திருந்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கும் சரிவரவில்லை என்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Nada raja
ஜூலை 23, 2025 22:51

நாய் வாளை நிமிக்க முடியாது... அவர்களை எல்லாம் திருத்த முடியாது