உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புஷ்பா படத்தால் பெண் பலியான சம்பவம்! ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்த அல்லு அர்ஜூன்

புஷ்பா படத்தால் பெண் பலியான சம்பவம்! ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்த அல்லு அர்ஜூன்

ஹைதராபாத்; புஷ்பா 2 பட திரையரங்க நெரிசலில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவின் போது படம் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். பட பிரிமியர் காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிக மந்தனா இருவரும் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி உயிரிழந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந் நிலையில் இந்த சம்பவம் குறித்து அல்லு அர்ஜூன் தமது வருத்தத்தை வீடியோ வடிவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது; திரையரங்கில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஆழ்ந்த மனவேதனையை தருகிறது. நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையில் அவர்கள் தனியாக இல்லை என்றும், குடும்பத்தை நேரில் சந்திப்பேன் என்றும் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். சவாலான பயணத்தில் அவர்கள் செல்ல உதவுவதற்கு சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டு உள்ளேன்.இவ்வாறு அல்லு அர்ஜூன் கூறி உள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாகவும் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

BHARATH
டிச 08, 2024 15:23

முதல்ல சினிமா கூத்தாடிகளுக்கு கடிவாளம் கட்டணும்.


Senthoora
டிச 08, 2024 05:58

இரண்டு பிள்ளைகளுக்கு ஒருதாயின் Blood மோனே 25 லட்சம் ஈடாகுமா?


M Ramachandran
டிச 07, 2024 19:35

இதையே நம் தமிழ் நடிகர்கள் செய்திருப்பார்களா? சிம்பிளா தியேட்டர் நிராவ்கிய்யய்யோர் அல்லது அதன் சொந்த காராரையையோ குற்றம் சாட்டி இருப்பார்கள். ரசிகர்கள் கறவை மாடுகள்


SUBRAMANIAN P
டிச 07, 2024 15:12

இது திராவிட நாடு.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 11:20

ஏமிரா .... க சாராய சாவுகளுக்கே நாங்க பத்து லட்சம்தான் தருவோம் .... அதுவும் அரசுப்பணம் ... எங்களை சங்கடத்துல சிக்க வைக்கிறியா???? அல்லு அர்ஜுன் மீது புலிகேசி மன்னர் கோபம் .....


Ram
டிச 07, 2024 08:07

மக்களுக்கு சினிமா என்ற பைத்தியம் புடித்திருக்கும்வரை இப்படித்தான் நடக்கும் .... பாவம் அந்தப்பெண் ... ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் இடத்திற்கு போகக்கூடாது என்று மக்களுக்கு புரியவேண்டும்


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 08:04

மக்கள் இன்றும் சினிமாவின் பின்னால் வெறியாக உள்ளார்கள். இது மாறவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை