உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்டு தந்து கூட்டு பாலியல் பலாத்காரம்; ஆசிரம சாமியார் மீது வீராங்கனை புகார்

லட்டு தந்து கூட்டு பாலியல் பலாத்காரம்; ஆசிரம சாமியார் மீது வீராங்கனை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பூர்: உத்தர பிரதேசத்தில், ஆசிரமத்துக்கு சென்ற தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனைக்கு மயக்க மருந்து கலந்த லட்டு தந்து சாமியார் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.,யின் கான்பூரில் உள்ள கோவிந்த நகரைச் சேர்ந்த தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனை ஒருவர், பழைய துணிகளை விற்பனை செய்வதற்கான கடை அமைப்பதற்காக இடம் தேடி வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் மஹ்தோ என்பவர் பழக்கமானார். அப்பகுதியில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றால், உள்ளூரைச் சேர்ந்த பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும், அவர்கள் வாயிலாக கடை வைக்க எளிதில் இடம் கிடைக்கும் என்று அந்த பெண்ணிடம் கோவிந்த் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பி, அதே பகுதியில் உள்ள ஆசிரமத்துக்கு கோவிந்துடன் அந்த பெண் சென்றார். அங்கு ஆசிரமத்தின் தலைமை சாமியார் உட்பட பலர் இருந்தனர். அப்போது, அந்த பெண்ணுக்கு சாப்பிடுவதற்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்ட அடுத்த சில நொடிகளில், அந்த பெண் மயக்கமானார். இதையடுத்து, கோவிந்த், தலைமை சாமியார் உட்பட நான்கு பேர் அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஜனவரியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, கான்பூர் போலீசாரிடம் சமீபத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். நீதி கேட்க ஆசிரமம் சென்ற போது அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கியதாக கூறி, அது தொடர்பான வீடியோவையும் புகாருடன் போலீசில் அந்த பெண் சமர்ப்பித்தார். சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளித்தது குறித்து போலீசார் கேள்வி எழுப்பிய போது, 'சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு அரசியல் ரீதியாக நட்பு இருந்ததால் புகார் அளிக்க பயந்தேன்', என, அந்த பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆசிரமத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே, சம்பவம் நடந்ததாக கூறப்படும் சமயத்தில் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் பங்கேற்றதாக தலைமை சாமியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன், அது தொடர்பான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. இரு தரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Abdul Rahim
ஜூன் 02, 2025 18:06

அண்ணா பல்கலை சம்பவத்தில் விடாமல் வாந்தி எடுத்து கொண்டிருக்கும் யாராச்சும் பார்த்திங்களா பாவம் மானஸ்தனுங்க பாருங்க அதான் ஓடி ஒளிஞ்சிட்டானுங்க ...


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2025 17:23

சாமியார் பாதர் இமாம் என்று சொல்லிக்கொண்டால் அவர்களுக்கு பாலியல் எண்ணம் வரக்கூடாது.


Sudha
ஜூன் 02, 2025 11:19

நம்பிக்கை துரோகமும் சதியும் செய்த கோவிந்த் முழு முதல் குற்றவாளி. எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் இவனை கவனித்தால் நல்லது. இந்த விஷயத்தில் தமிழகம் பரவாயில்லை.


தமிழன்
ஜூன் 02, 2025 14:54

என்ன பரவாயில்லை ?


ramesh
ஜூன் 02, 2025 11:12

பராசக்தி பட வசனம் தான் ஞாபகம் வருகிறது கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாது என்ற சிவாஜி கணேசன் வசனம் ஞாபகம் வருகிறது . ஆண்களில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் இல்லை . ஆனால் கடவுள் பணியில் இருப்பவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பாலியல் குற்றத்தில் ஈடு பட்டால் கடுமையான நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளவேண்டும்


Ramalingam Shanmugam
ஜூன் 02, 2025 10:38

யார் அந்த சார் முதலில் சொல்


ramesh
ஜூன் 02, 2025 11:03

அந்த சாமியாரிடம் போய் கேள்


Raja k
ஜூன் 02, 2025 10:13

தமிழ்நாட்டுல இந்த சம்பவம் நடந்திருந்தா இன்நேரம் எல்லாரும் சங்குபுங்குனு குதிப்பாங்க, திராவிடமாடல் அரசு, விடியா அரசுனு, எங்க போனாங்க சங்கிகளும், அவங்களுக்கு தூபம் போடுற ஊடகங்களும்? உ,பி மட்டும் ராமராஜ்ஜியம் நடக்குதா,,


Padmasridharan
ஜூன் 02, 2025 09:00

சம்பவம் நடந்த உடனே புகார் அளித்த அண்ணா பல்கலை மாணவிக்கு என்ன நடந்தது அதேதான் காவலர்கள் அங்கும் செய்வார்கள். இதில் மட்டும் One India One Action என்றுதான் காவலர்கள் பணத்தை, பலத்தை பார்த்து செயல்படுகின்றனர். அவங்க வீட்டு குடும்ப வம்சத்துக்கு கர்மா பலன்களை அனுபவிப்பர் சாமி


AMMAN EARTH MOVERS
ஜூன் 02, 2025 08:55

சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்புங்க


தமிழ்வேள்
ஜூன் 02, 2025 08:36

உயிர் பயமா?


Kalyanaraman
ஜூன் 02, 2025 08:21

சம்பவம் நடந்த உடனே அரசியல் பின்புலம் இருக்கும் என பயந்து புகார் தெரிவிக்காமல் இருந்தவர், ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்த அரசியல் பின்புலம் இல்லையா?? இது ஏதோ ஐயப்பன் கோயில் விவகாரம் மாதிரி இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவறு எந்த பக்கம் நடந்திருந்தாலும் முதல்வர் விட மாட்டார் அது நிச்சயம். இங்கே இருக்கிற முதல்வர் போல் அல்ல. யார் அந்த சார் என்று நாம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.