உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 முறை கன்னத்தில் அறை நடிகை ரன்யா ராவ் கதறல்:

15 முறை கன்னத்தில் அறை நடிகை ரன்யா ராவ் கதறல்:

பெங்களூரு :தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ், டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தன்னை கன்னத்தில் பல முறை அறைந்ததாகவும், உணவு வழங்க மறுத்ததாகவும், வெள்ளை காகிதத்தில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கைது

கன்னட நடிகை ரன்யா ராவ், கர்நாடகாவின் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=osguuhe2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில், பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின், கஸ்டடியில் இருந்த நடிகை ரன்யா ராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், கண்களுக்கு கீழே கருமையான திட்டுகளுடன், மன அழுத்தத்தில் அவர் இருப்பது போல தெரிந்தது. இந்நிலையில், டி.ஆர்.ஐ., கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு, சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவ் கைப்பட எழுதிய கடிதம்:நான் கைது செய்யப்பட்டது முதல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, டி.ஆர்.ஐ., அதிகாரிகளால் உடல் ரீதியாக தாக்கப்பட்டேன். என்னை, 10 - -15 முறை கன்னத்தில் அவர்கள் அறைந்தனர்.அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். பல முறை தாக்கப்பட்ட போதும், அவர்கள் தயாரித்த அறிக்கைகளில் கையெழுத்திட மறுத்து விட்டேன். மிகப்பெரிய மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்பட்டதால், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தயாரித்த, தட்டச்சு செய்யப்பட்ட 50 பக்கங்களிலும், 40 வெள்ளை காகிதங்களிலும் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை.

அனுமதிக்கவில்லை

மார்ச் 3 மாலை 6:45 மணி - மார்ச் 4 இரவு 7:50 மணி வரை கஸ்டடியில் இருந்தபோது, எனக்கு வேண்டுமென்றே உணவு தரப்படவில்லை; துாங்கவும் அனுமதிக்கவில்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக வலைதளமான யு டியூப் பார்த்து, தங்கம் கடத்துவது எப்படி என அறிந்து கொண்டதாக ரன்யா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமையை அவர் பெற்றிருந்ததால் தான், அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரன்யா ராவின் தந்தையும், டி.ஜி.பி.,யுமான ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vee srikanth
மார் 19, 2025 10:12

அடிக்கும் போது எண்ணிக்கொண்டிருந்தாரா


Iyer
மார் 17, 2025 21:54

இதில் எதோ INTERNATIONAL GANG செய்யும் வேலைதான். ரன்யாவை தீவிர விசாரணை செய்து GANG LEADER கள் எல்லோரையும் பிடிக்கவேண்டும். இவருக்கு இப்போதைக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. உள்ளேயே இருப்பதுதான் ரன்யாவுக்கு பாதுகாப்பு. இப்போது ஜாமினில் வெளியே வந்தால் ரன்யாவை அவரது GANG உறுப்பினர்களே ரன்யாவை தீர்த்துக்கட்டிவிடுவார்கள்


baala
மார் 17, 2025 09:55

naan பலமுறை எழுதுவதுதான். இங்கு கருத்து எழுதுபவர்களில் எத்தனை பேர் நல்லவர்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.


RAMESH
மார் 16, 2025 16:42

இதில் திராவிட மாடல் கூட்டாளியா.....ஏதோ ஒரு பயலாவது தமிழ்நாட்டில் இருந்து கூட்டு களவாணி யாக இருப்பானே


R K Raman
மார் 16, 2025 14:01

அடப்பாவி... எந்தக் கடத்தலும் நாட்டிற்கு நல்லதல்ல


Abdul Rahim
மார் 16, 2025 13:51

கடத்தலை தடுக்க இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் 2% இருந்தால் கடத்தலை தடுக்கலாம் இதனால் அதிக தங்கம் இறக்குமதி ஆகும் வரியும் கிடைக்கும் வெளிநாட்டில் வருமானம் இந்தியவிற்க்கு முழுமயாக கிடைக்கும் குறைந்த லாபம் அதிக வருமானம்.


GMM
மார் 16, 2025 10:03

தங்கம் கடத்தியது உண்மையா? இல்லையா? கன்னத்தில் அறைந்தார்கள் என்பதை விட, யாரும் வன்கொடுமை, பாலியல் புகாருக்கு வழி சொல்லவில்லை? அப்படி என்றால் தான் வழக்கை குழப்ப முடியும். கேரளா, விஜயன், தமிழக செந்தில், பொன்முடி உச்ச மன்றம் சென்று குற்றத்தில் இருந்து வாதம் மூலம் தப்பி விட்டனர். மம்தா, மருத்துவ கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி வழக்கு நீர்த்து வருகிறது. நீங்கள் பெண், ஏன் பயப்படுகிறீர்கள்? உங்கள் வாதத்தை மன்றம் கனிவுடன் கவனிக்கும். குற்றத்திற்கு ஆஜர் ஆகும் வக்கீலை தண்டிக்காத வரை குற்றவாளிகள் வெல்வர். அமைதி. அமைதி.


kr
மார் 16, 2025 05:28

Why give media coverage for investigation proceedings in such cases. Public can just be informed of the final conclusion. No need for daily and breaking news coverage for such anti social activities


Indhuindian
மார் 16, 2025 05:18

ஒரு கிலோவுக்கு ஒரு அடி கணக்கு சரியா இருக்கே


தமிழன்
மார் 16, 2025 01:34

மேக்கப்பும் கண் மையும் லிப்ஸ்டிக்கும் ஐ ப்ரோவும் போட முடியல அதான் மொகரகட்ட இப்படி இருக்கு யுவர் ஆனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை