உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தங்கம் கடத்தல் வழக்கில், காபிபோசா சட்டமும் ரன்யா ராவ் மீது பாய்ந்தது. ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் இவர் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l19n8rzf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் இப்படி நகைகளை கடத்துவதற்கு கர்நாடக போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் மீது ஏற்கனவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை வழக்கு தொடர்ந்து உள்ளன. https://www.youtube.com/embed/kuTgpWeqOVkஅதே சமயம் இவர் பலமுறை தனது ஜாமினுக்காக விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டன இந்த நிலையில் தற்போது மோசடி பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி காபிபோசா சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இவர் மீதான நடவடிக்கையை, வழக்குகளை ஆய்வு செய்யும் நீதித்துறை ஆலோசனை குழு உறுதி செய்துள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:21

பொதுவாக நமது நீதிமன்றங்கள் குற்றம் புரிந்தவர்களுக்கு ஜாமீன் வேண்டுமா என்று கேட்டு கொடுக்கும். ஆனால் இந்த வழக்கில் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது என்று செய்தி. ஒருவேளை நீதிமன்றத்தில் ஜாமீன் தீர்ந்துபோய்விட்டதா??


அப்பாவி
ஜூலை 17, 2025 09:49

வழக்கை சட்டு புட்டுனு விசாரிக்காம நீர்த்துப் போகச் செய்து கடைசில சாட்சியம் பத்தலேன்னு நீதிமன்றமோ அமலாக்கத்துறையோ ஊத்தி மூடிரும். இன்னும் ஒரு வருசத்துக்கு விசாரிக்க என்ன இருக்கு? அவிங்களே கடத்துனேன்னு ஒத்துக்கிட்டாலும், நீ சீன்ன மீன், பெரிய திமிங்கிலத்தப் பிடிக்கப் போறோம்கற ரேஞ்சில் ஊத்தி மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோடிகள் கமிசனாக குடுக்கப்படும்.


Jack
ஜூலை 17, 2025 11:26

சாதிக் வெளில இருக்காரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை