உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி மகனுக்கு ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணம்

அதானி மகனுக்கு ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணம்

பிரயாக்ராஜ்: அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் மற்றும் குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவுக்கு, 2023 மார்ச் மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களுடைய திருமணம் குஜராத்தின் ஆமதாபாதில், பிப்., 7ம் தேதி நடக்க உள்ளது.குஜராத்தின் மான்டேரா மைதானத்தில் அதே நாளில் நடக்க இருந்த இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டி வேறு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், அந்த மைதானத்தில், இந்தத் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள், தனியார் விமானங்கள், 58 நாடுகளைச் சேர்ந்த சமையல் நிபுணர்களுடன், 10,௦௦௦ கோடி ரூபாய் செலவில் இந்தத் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் வெளியாயின.அது குறித்து, கவுதம் அதானி நேற்று கூறுகையில், ''இந்தத் திருமணம் மிகவும் எளிமையாக, பாரம்பரிய முறையில் நடக்கும். மிகவும் பிரமாண்டமான முறையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களை வரவழைத்து ஆடம்பரத்தை காட்ட மாட்டோம். சாதாரண குடும்பத்தின் திருமணம் போலவே இது நடக்கும்,'' என, அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஜன 22, 2025 10:10

முதல்வர் மாப்பிள்ளையய்க்கு அதான் G ஸ்கொயர் புகழ் அழைப்பு இருக்குமென?


M Ramachandran
ஜன 22, 2025 10:07

எங்கே ஆதானி ஆதானி ராகுலிடன் பைத்தியம் பிடித்து திரியுமே ஊபீஸ் கூட்டம் இப்போர் வாய் திறக்கலையெ.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 22, 2025 08:52

அமெரிக்க அதிபர் பதவியேற்பு முதல் அதானி வீட்டு விசேஷம் வரை திமுக, திராவிடம், உதயநிதி - இவர்களைத் தாண்டி சிலரால் சிந்திக்கவோ பேசவோ முடிவதில்லை என்பது பரிதாபத்துக்குரியது.


VENKATASUBRAMANIAN
ஜன 22, 2025 07:54

வட போச்சே என்று திமுகவினர் உள்ளனர். இல்லையென்றால் இதை ஒரு மாதம் ஓட்டலாம். ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் ரெடி. பாவம் எல்லாம் போச்சு


Ravi
ஜன 22, 2025 07:25

உதய்ணாவுக்கு அழைப்பு இருக்கா இல்லையா


Kasimani Baskaran
ஜன 22, 2025 06:23

சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை