உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் அக்னிவீரர்களுக்கு கூடுதல் சலுகை : மத்திய அரசு

முன்னாள் அக்னிவீரர்களுக்கு கூடுதல் சலுகை : மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் அக்னிவீரர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரசு துறைகளில் பணி வாய்ப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த 2022-ல் அக்னிபத் ஆட்கள் சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் ராணுவம், விமானம் மற்றும் கடற்படையில் 4 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுகிறார்கள்.இதற்காக, சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப், எஸ்.எஸ்.பி, போன்ற ஆயுத காவல் படைகளில் எதிர்காலத்தில் 11 லட்சம் கான்ஸ்டபிள்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் பணிகளில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் அக்னிவீரர்களை துணை ராணுவப் படைகளில் சேர்ப்பதற்கு எந்த உடல் தகுதித் தேர்வும் தேவையில்லை.இந்நிலையில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்கள் துறையின் கீழ் இரண்டாவது அட்டவணையில் 'முன்னாள் அக்னிவீரர்களின் மேலும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்ற புதிய அம்சத்தின் மூலம், 1961 ஆம் ஆண்டு விதிகள் ஒதுக்கீடு திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் சலுகையை பெறலாம்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
ஜூன் 18, 2025 07:26

Reserve 50% of All Posts to Fit Straight-Forward Efficient ExServicemen, So that All Citizens Will Join Armed Forces-ShirtServices


guna
ஜூன் 18, 2025 05:42

அப்பாவி....இவன் கிண்டலுக்கு பிறந்தவன் போல....


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 18, 2025 01:09

பீகாரில் தேர்தல் வரப்போகுதாம்லே.


அப்பாவி
ஜூன் 17, 2025 22:01

இந்த ஐ.டி வேலைக்கு போனதுக்கு பதில் அக்கினி ராசுவா போயிருக்கலாம்.


சமீபத்திய செய்தி