உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதயாத்திரை போகும் பக்தர்கள் கவனத்துக்கு! திருப்பதி தேவஸ்தானம் அட்வைஸ்

பாதயாத்திரை போகும் பக்தர்கள் கவனத்துக்கு! திருப்பதி தேவஸ்தானம் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். சாலை மார்க்கமாக வந்து செல்லும் பக்தர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி மலைபாதைகள் வழியாக வந்து செல்கின்றனர்.இந் நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை தேவஸ்தானம் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு; * 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா,வலிப்பு, மூட்டுவலி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம்.* உடல்பருமன், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலை ஏறுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.* திருப்பதி தேவஸ்தானம் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதய நோய், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம். * நீண்டநாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், பயணத்தின் போது தேவையான மருந்துகளை கைவசம் எடுத்துச் செல்வது நலம்.* ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சை வேண்டுவோர், கோயில் செல்லும் மலைப்பாதையில் 1500வது படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுக்களை அணுகலாம்.* திருமலையில் உள்ள மருத்துவமனையில் 24 மணிநேரமும் உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.* நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், கிட்னி தொடர்பான தொந்தரவுகளுக்கு சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
அக் 26, 2024 17:14

பாராட்டுக்கள் இதே போன்று தரிசனத்துக்கு வருபவர்களுக்கு இடையூறு இல்லாமல் சுதந்திரமாக சாமி கும்பிட ஆவன செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்


முக்கிய வீடியோ