வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இருந்தாலும் ஆப்கான் அரசுடன் தூரநின்றுதான் பழகவேண்டும். எரிமலை இன்று எரியாமல் அமைதியாக இருக்கலாம். ஆனால் என்று மீண்டும் வெடித்து சிதறும் என்று யாராலும் அறியமுடியாது. அதுபோன்றுதான் பயங்கரவாதத்தை வளர்த்த நாடுகளும்.
புதுடில்லி: ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்களின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவை தவிர எந்த நாடும், தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. தலிபான் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் சர்வதேச பயணம் மேற்கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே தடை விதித்துள்ளது.இந்நிலையில், முட்டாகியின் வருகைக்கு அனுமதி தரக்கோரி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்திய - ஆப்கன் உறவுக்கு இது மிகவும் முக்கியமானது' என, அப்போது வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரது வருக்கைக்கு ஐநா அனுமதி அளித்தது.ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி இன்று (அக் 09) இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அக் 16ம் தேதி வரை இந்தியாவில் இருப்பார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புதுடில்லிக்கு வருகை தந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகியை வரவேற்கிறேன். இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து அவருடன் கலந்துரையாடுவதை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியமைத்த பின், இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அமைச்சர் அமிர்கான் முட்டாகி என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் ஆப்கான் அரசுடன் தூரநின்றுதான் பழகவேண்டும். எரிமலை இன்று எரியாமல் அமைதியாக இருக்கலாம். ஆனால் என்று மீண்டும் வெடித்து சிதறும் என்று யாராலும் அறியமுடியாது. அதுபோன்றுதான் பயங்கரவாதத்தை வளர்த்த நாடுகளும்.