உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தொடர் தோல்வி: கழற்றி விட துணிந்தது சமாஜ்வாதி!

காங்கிரஸ் தொடர் தோல்வி: கழற்றி விட துணிந்தது சமாஜ்வாதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் சரியாக செயல்படவில்லை எனக்கூறி, காங்கிரசை அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி புறக்கணிக்க துவங்கி உள்ளது.காங்கிரஸ் தலைமையிலான ' இண்டியா ' கூட்டணியில் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட இக்கட்சிகள் விரும்பின. ஆனால், அங்கு வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதியை ஒதுக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, இரண்டு கட்சிகளும் தனித்து களமிறங்கின. இதனால், பல இடங்களில் காங்கிரஸ் சொற்ப ஓட்டுகளில் தோல்வியை தழுவி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.தோல்வியில் இருந்து மீள்வதற்குள் கூட்டணி கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகிவிட்டன. முதலில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் காங்கிரசை விமர்சித்தார். அடுத்ததாக சமாஜ்வாதியும் காங்கிரசை புறக்கணிக்க துவங்கிவிட்டது.உ.பி.,யில் விரைவில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை அங்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சமாஜ்வாதியிடம் காங்கிரஸ் வெளிப்படுத்தியது. ஆனால், அதற்கு பதில் சொல்வதற்கு மாறாக 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. இதற்கு காரணம் தெரிவிக்கும் சமாஜ்வாதி, லோக்சபா தேர்தலில் நாங்கள் 62 தொகுதிகளில் போட்டியிட்டு 37 ல் வெற்றி பெற்றோம். ஆனால், காங்கிரஸ் 17 ல் போட்டியிட்டு 6ல் மட்டுமே வென்றது. இதனால் 3 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக காங்கிரசின் அவினாஸ் பாண்டே கூறுகையில், இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடப்பதற்கான எந்த தகவலும் இல்லை. வேட்பாளர் அறிவிப்பு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு கூறவில்லை. நாங்கள், மாநிலத்தில் அதிக நம்பிக்கையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். லோக்சபா தேர்தலுக்கு முன்னரும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே பிரச்னை எழுந்தது. ராகுல், பிரியங்கா தலையீட்டிற்கு பிறகே அதனை சரி செய்தனர். ம.பி., மாநிலத்திலும் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதிக்கு தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுத்தது. சத்தீஸ்கர் , ராஜஸ்தானிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்காமல் காங்கிரஸ் செயல்பட்டது. இதனால், அந்த மாநிலங்களில் தோல்வியைதான் எதிர்கொண்டது. தொகுதி ஒதுக்கீட்டில் பிடிவாதம் பிடிக்கும் காங்கிரசை, இண்டியா கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா கடுமையாக சாடியிருந்தார்.உ.பி., இடைத்தேர்தலில் சமாஜ்வாதியிடம் கூடுதல் தொகுதி கேட்டு காங்கிரஸ் காத்து கொண்டு இருக்கும் நிலையில், மறுபுறம் மாநிலத்தை ஆளும் பா.ஜ., வெற்றி பெறும் முனைப்பில் பணிகளை துவக்கிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

குறை ஒன்றுமில்லை இறைவனே
அக் 10, 2024 20:20

? சிரிப்புத்தான் வருகுது


sethuramalingam
அக் 10, 2024 20:10

தமிழகத்தில் திமுக அழிய முடியாத கட்சியாக இருக்கும்


பேசும் தமிழன்
அக் 10, 2024 07:47

கான் கிராஸ் கட்சி இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணி.... முற்றிலும் துடைத்து எறியப்பட வேண்டிய கட்சி.... நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து அதனை தான் செய்து வருகிறார்கள்..... அதிலும் இந்த இத்தாலி போலி காந்தி கும்பல்... நாட்டுக்கு எதிரான ஆட்கள்.... எப்போதும் தேச விரோத பேச்சு தான்... பப்பு விடம் இருந்து வரும்.


Jesu Raj
அக் 11, 2024 08:07

நாம் இப்படி பேசும் வரை நாம் இப்படித்தான் இருப்போம்


Kasimani Baskaran
அக் 10, 2024 05:51

மாநில அரசியல் புட்டுக்கொண்டது என்றால் அகிலேஷுக்கு வருங்காலம் இல்லை. ஆகவே காங்கிரசை தியாகம் செய்தால் தப்பிக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். தமிழகத்திலும் கூட இது நடக்கலாம் - ஏனென்றால் பாஜகவுக்கு தீமுக்காவும், தீமுக்காவுக்கு பாஜகவும் தேவை. பாஜக தீமுக்கா கூட்டு என்று வந்தால் தீமுக்காவும் ஆதிமுக்கா போல ஆகிவிடும். பழைய மாணவர், உள்ளடுக்கு, அழுகிப்போன அடுக்கு என்று பிரிந்து தீமுக்கா அல்லோலகல்லோலப்பட்டு விடும். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். திராவிடம் அழித்தால் அது தமிழகத்துக்கும், தமிழனுக்கும், தமிழுக்கும் நல்லது.


R.Varadarajan
அக் 10, 2024 05:24

இனி பாஜகவிற்கு இணையாக வேறு ஒரு கட்சி தேசிய எதிர்கட்சியாக உருவாகவேண்டும். கோணங்கி கட்சி குப்பைக்கூடையில் போடப்படவேண்டிய கட்சி எனபதை மக்கள் உணரும் நாள் நெருங்கி விட்டது.


வாய்மையே வெல்லும்
அக் 10, 2024 04:25

வன்மையாக கண்டிக்கிறேன். ஏனுங்க இங்க கொசுத்தொல்லை , போலிகுண்டுபுறவழியர்கள் , அடிலெய்டு ஆசாமிகள் அரசியல் ஆதாயம்தேடி அலைபவர்கள் வேலைக்கே ஓலைவைச்சால் அவர்களில் பலர் மூக்கு உடைபட்டு போவார்களே. மோடிக்கு எதிராக கம்புசுற்ற முடியாதே.. முக்கியஸ்தர் முத்துநாறா அழுது புலம்புவாரே இவரை யார் தேற்றுவது .? சமாஜ்வாடி கட்சியே உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? நீங்க இப்படி செஞ்சா வெளிநாட்டுஅமெரிக்கா வாழ் ஸோரோசு பப்புவிற்கு பேதிகலந்த பால்பாயாசம் ஊட்டமாட்டார் என்பது எப்படி நிச்சயமாகும் ? எதுக்கும் அகிலேசு பார்த்து சூதகமா நடந்துக்க. இல்லாங்காட்டி எங்க பப்பு பப்பி கரடி குண்டுமல்லி கார்ஜூன் கோவத்துக்கு ஆளாயிடுவீங்க சொல்லிப்புட்டேன் ஆமாம்


Kumar Kumzi
அக் 10, 2024 01:55

தேசவிரோத கொங்கிரஸ் கூட்டணி அழிவு இந்திய நாட்டின் எதிர் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்


RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 22:36

அகிலேஷுக்கு தேசிய அரசியலைவிட உபி அரசியல் முக்கியம் ...... ஆகவே அவர் காங்கிரசை ஒதுக்குகிறார் ..... இதில் வியப்பில்லை ...... அகிலேஷுமீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை ..... அவ்வளவு ஏன், மேற்குவங்க அம்மையாரும் அப்படித்தானே ??


Jay
அக் 09, 2024 22:23

வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் அவர்கள் மன நிலைமை ஒன்றாக இருப்பதால் ஒன்றாக இருந்து தேர்தலை சந்திக்கவே முற்படுவார்கள். ஜனநாயக காலத்திலும் அரசாட்சி நடத்த முற்படுபவர்கள்: ராவுல், தாக்கரே, ஸ்டாலின், அகில், ஒமர்


வாய்மையே வெல்லும்
அக் 09, 2024 21:18

பெயர் இண்டி கூட்டணி, செய்வதோ வேலை கூட்டணி. ஒருவருக்கு மற்றொருவரை பிடிக்காது அவர்கள் வளர்ந்தால் தனக்கு பிரச்சனை என்கிற உள்ளடி நோக்கம். இந்த ஓநாய்கள் எல்லாம் ஒன்னு கூடிமோடிக்கு எதிராக சதிசெய்து அதிகப்ரசங்கி தானம்.. ஓநாய்களின் ஆட்டம் முடிவுக்கு வன்னு


புதிய வீடியோ