உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஹா, இதுவல்லவோ தேர்தல் வாக்குறுதி; வாலிப வாக்காளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

ஆஹா, இதுவல்லவோ தேர்தல் வாக்குறுதி; வாலிப வாக்காளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்' என சரத் பவார் கட்சி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் வாக்குறுதி அளித்துள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ., தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் - சரத் பவார் கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகின்றன. அனைத்து கட்சி வேட்பாளரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் சரத் பவார் கட்சி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் தேர்தல் வாக்குறுதி ஒன்று அளித்து அனைவரவது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில், ராஜேசாகேப் தேஷ்முக் பேசியதாவது: நான் எம்.எல்.ஏ., ஆகினால், திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். மணப்பெண் தேடும் இளைஞர்களிடம் வேலை அல்லது தொழில் இருக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள்.முந்தைய ஆட்சியாளர்கள் ஒரு தொழிலையும் கொண்டு வரவில்லை. எனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் திருமணம் நடப்பது கடினமாக உள்ளது. அவர்களது பிரச்னைக்கு நான் தீர்வு காண்பேன் இவ்வாறு அவர் பேசினார். அவரது வாக்குறுதி மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sundararajan
நவ 12, 2024 08:25

அதுக்கு பேசாம கல்யாண தரகர் வேலை பாக்கலாமே எதுக்கு அரசியல்?


Dharma
நவ 08, 2024 16:42

திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை தருவோம்.


Ramesh Sargam
நவ 08, 2024 12:56

எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்?


Mohammad ali
நவ 08, 2024 12:53

பதவிக்காக என்னவெல்லாம் செய்யுறானுக .


Smba
நவ 08, 2024 12:50

காதலிகளையும் ஏற்பாடு செய்து தரலாம்


Sampath Kumar
நவ 08, 2024 12:13

மறை கழண்ட கேஸ் போல


enkeyem
நவ 08, 2024 11:59

ஜெயித்த பிறகு பொண்ணை கூட்டிட்டு வா திருமணம் செய்து வைக்கிறேன் என்று மழுப்புவான். டுபாக்கூர் ஆசாமி


சமூக நல விருப்பி
நவ 08, 2024 11:55

வாக்குறுதி நல்லா தான் இருக்கு ஆனா அவங்களுக்கு பிரச்சனை வந்தா? இனி எதையும் முயற்சி செய்து பார்ப்பத்தில் தவறு இல்லை


Barakat Ali
நவ 08, 2024 11:52

ஏற்கனவே திருமணம் ஆன ஜோடிகளுக்கு திராவிட மாடல் மீண்டும் நடத்துவது அதைவிட அருவருப்பு .....


Ramkumar Ramanathan
நவ 08, 2024 11:07

புதுசு புதுசா யோசிக்க சரக்கு வேணும் இல்லையென்றால் இப்படித்தான் தோணும் இதை விட மோசமாவும் தோணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை