உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!

குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!

ஆமதாபாத்: குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் அடையாளம் காணப்பட்டு இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 28,29 ஆகிய தேதிகளில், குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6,500 பேரை கண்டறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சுமார் 450 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உறுதியானதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சந்தோலா ஏரி பகுதியில் அவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளையும் நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சந்தோலா ஏரிப் பகுதியில் இன்று (மே 20) நகராட்சி நிர்வாகம் ஒரு பெரிய இடிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. 2,500 க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை அடையாளம் காணப்பட்டு இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோத குடியேறிய வங்கதேச நாட்டினருக்குச் சொந்தமானவை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் பலத்த பாதுகாப்புடன் இடிக்கும் பணி நடந்து வருகிறது. குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்தை அகற்று பணி கடந்த ஒரு மாதமாக முழு வீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohamed Ishaq
மே 24, 2025 00:45

இடித்த வீடுகள் எல்லாம் இஸ்லாமியர்கள் வீடுகளாக தான் இருக்கும் முஸ்லிம்கள் கட்டினால் சட்டவிரோதம் இந்துக்கள் கட்டினால் சட்ட விரோதம் இல்லை எப்படிப்பட்ட நியாயம் பார்த்தீர்களா


Mohamed Ishaq
மே 24, 2025 00:43

குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் அமெரிக்காவிற்கு சென்று பல வருடங்களாக திருட்டுத்தனமாக சம்பாதித்தீர்களே உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா


Ramalingam Shanmugam
மே 20, 2025 12:48

நம்ம ஊரில் அடைக்கலம் கொடுப்போம் இப்போ என்ன செய்விங்க