உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானம் பழுது; கடைசி நேரத்தில் சிங்கப்பூர் பயணம் ரத்து

ஏர் இந்தியா விமானம் பழுது; கடைசி நேரத்தில் சிங்கப்பூர் பயணம் ரத்து

புதுடில்லி: சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டது.டில்லி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று மாலை ஏர் இந்தியா விமானம் செல்ல இருந்தது. பயணிகள் 200 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்படுவதற்காக அனைவரும் காத்திருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. விமானத்தில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் வேலை செய்யவில்லை. இரண்டு மணி நேரம் முயற்சித்தும், பழுது நீக்க முடியாத காரணத்தால் பயணத்தை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்தது. பயணிகள் 200 பேரும் இறக்கி விடப்பட்டனர்.இது குறித்து பயணிகள் கூறியதாவது:டில்லி விமான நிலையத்திலிருந்து இரவு 11 மணியளவில் புறப்பட திட்டமிடப்பட்டது, ஆனால் விமானத்தின் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மற்றும் மின் விநியோக அமைப்பு ஆகியவை பழுதடைந்தன. சரி செய்ய முடியாததால் எங்களை கீழே இறக்கி விட்டனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

W W
செப் 11, 2025 09:39

நல்ல வேலை பிலைட் எடுக்கும் முன்பேயே ஏசி பெயில் ஆனது, இல்லையீல் பாவம் பாசஞ்சர் அவதிக்குள் ஆகியிருப்பார்கள்.இது மாதிரி சம்பவம் அதுவும் இன்டர்நஷனல் பிலைட்டில் அகி இருக்க கூடாது, பிலைட் மைண்டென்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. வருந்த தக்க விஷயம்.


Raja
செப் 11, 2025 07:37

Do only Air India flights are getting cancelled and issues not other flights?


முக்கிய வீடியோ