உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசியாபாத்: காசியாபாத், கோல்கட்டா ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான ஓடுபாதையிலேயே 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு; கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து காசியாபாத்திற்கு ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக விமானம் புறப்படவில்லை.கிட்டத்தட்ட 1 மணிநேரத்துக்கும் அதிகமாக விமான ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மேலேழும்பாமல் இருந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன கோளாறு என்பதை கண்டறியும் பணியில் இறங்கி உள்ளனர்.இந் நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;கோல்கட்டா, ஹிண்டன் விமானம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்டவில்லை. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தாமதமாக இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 270 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த சில நாட்களில் மீண்டும் ஏர் இந்தியா விமானம் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Indian
ஜூலை 19, 2025 14:51

இப்பொழுதுள்ள ஏர் இந்தியா விமானங்கள் எல்லாவற்றையும் காயலாங்கடைக்கு போட்டுவிட்டு, புதியதாக விமானங்கள் வாங்கவேண்டும்


Rathna
ஜூன் 15, 2025 20:25

நிறுவனங்களின் தொழில் போட்டி மற்றும் அண்டைய நாட்டின் சதியாக கூட இருக்கலாம். இந்தியா வளர்வதை எதிரிகள் விரும்பவில்லை.


Narayanan Muthu
ஜூன் 15, 2025 20:23

ஓட்டை உடைசல் விமானங்களை தள்ளி விட்டு லம்பாக ஒரு தொகையை தேற்றிக்கொண்டதோ.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 15, 2025 20:19

விமானம் என்பது பஸ்ஸோ, காரோ இல்லை. விமானி உடனே இறங்கி பானெட்டை திறந்து ரிப்பேர் செய்வதற்கு. ரயிலுக்காவது மாற்று என்ஜின் வந்து இழுத்துச் செல்லும். விமானத்திற்கு மாற்று உடனடியாக கிடைக்காது. வல்லுனர்கள் வந்து சரிசெய்யும் வரை விமானியின் கட்டுப்பாட்டில்தான் விமானம் இருக்கும். அவரால் இறங்கி ஓட முடியாது. சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதும் அவருக்குத் தெரியாது. அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. இவ்வளவு இக்கட்டுகளை கடந்துதான் அவர்கள் வேலை செய்கிறார்கள். பயணிகள் புரிந்துகொண்டு நடக்கவேண்டும்.அல்லது தங்களுக்கு ஒத்துவராத விமானப் பயணத்தை தவிர்த்து, ரயில், பஸ், காரில் செல்ல வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 15, 2025 20:12

பயணிகளுக்கு ஒருமுறை பயம், விமானிகளுக்கும், பணியாளர்களுக்கும் அன்றாடம் பயம் இருக்கும். நித்ய கண்டம், பூர்ணாயுசு என்று சொல்வார்கள். அவர்களின் நிலை உணர்ந்து பயணிகள் அனுசரித்து செல்லவேண்டும். சும்மா காசுகொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டால் விமான கம்பெனி நமது அடிமை என்று நடந்துகொள்ள கூடாது. விமான செய்திகளின் மனம் நோகும்படி நடந்து கொள்வதை தவித்து, அவர்களை. சிரமங்களை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். நம் ஒருவரின் அவசரத்தைவிட அனைத்து பயணிகளின் நலன் கருதி அமைதிக்காக வேண்டும். விமானம் என்பது மிக நுணுக்கமான தொழில்நுட்பத்தில் இயங்குவது. உள்ளே விளக்கு எரியவில்லை, உணவு சரியில்லை, டிவி வேலை செய்யவில்லை என்பதெல்லாம் மிக சாதாரண விஷயங்கள். அவற்றையும் சரியாக வழங்க வேண்டியது நிறுவனத்தின் கடமை என்றாலும், பயணிகளின் பாதுகாப்பு மட்டுமே அவர்களின் தலையாய கடமை என்பதை நாமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூன் 15, 2025 22:51

எதுக்கு இந்த அட்வைஸ். உன்னை யாரு கேட்டா.?


Ramesh Sargam
ஜூன் 15, 2025 20:02

இப்பொழுதுள்ள ஏர் இந்தியா விமானங்கள் எல்லாவற்றையும் காயலாங்கடைக்கு போட்டுவிட்டு, புதியதாக விமானங்கள் வாங்கவேண்டும் ஏர் இந்தியா நிறுவனம். மக்கள் உயிர் மீது விளையாடாதீர்கள்.


sundarsvpr
ஜூன் 15, 2025 19:52

எவ்வாறு உயிருள்ள வஸ்துக்களுக்கு நல்லது ,கெட்டது, ஆயுள்... ஆண்டவனால் தீர்மானிக்கப்படுகிறதோ அது போல் உயிரற்ற வஸ்துக்களுக்கும் உண்டு. விமானத்தில் கோளாறு என்றால் பணியாளர்கள் படித்தவர்கள் இதற்கு விடை காண்பது நல்லது.


Ramesh Sargam
ஜூன் 15, 2025 19:39

அந்த அகமதாபாத் கோரவிபத்து நம் மனதில் இருந்து மறைவதற்குள் மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமான கோளாறு. புனேயில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு. ஹெலிகாப்டரில் யாத்திரை சென்றவர்கள் விபத்தில் இறப்பு. இதெல்லாம் போதாக்குறைக்கு நாடு முழுவதும் பல சாலை விபத்துக்களில் பலர் உயிரிழப்பு. என்ன நடக்கிறது இந்தியாவில்?


Tetra
ஜூன் 15, 2025 20:32

லஞ்சம் ஊழல்‌... திறமையின்மை‌... அறிவின்மை... இவ்வளவே.


D.Ambujavalli
ஜூன் 15, 2025 17:58

இனி passenger ரயிலிலாவது, ‘இரண்டு நாள் முன்னதாகப் புறப்பட்டு’ போகலாமே ஒழிய ஏர் இந்தியாவா , வேண்டவே வேண்டாம்’ என்று மக்கள் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


sundarsvpr
ஜூன் 15, 2025 17:29

விபத்துகளை நினைத்தால் நம்மால் அறியமுடியாத சக்தியால் உலகம் இயங்குகிறது. அறியமுடியாத சக்தி என்று தெரிந்தும் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். சக்திதான் விதி. விதியை நிர்ணயத்தவன்தான் தடுக்க இயலும், விதியை வெல்ல உண்மையுடன் போராடினால் அதுதான் ஆண்டவனிடம் சரண் அடைதல். இதற்கு பலன் கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை