உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி; ஏர் இந்தியா பயணி கொந்தளிப்பு

ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி; ஏர் இந்தியா பயணி கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட, 'ஆம்லெட்'டில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்த விமான பயணி அதிர்ச்சி அடைந்து வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.டில்லியை சேர்ந்தவர் சுயிஷா சாவந்த். இவர் தனது 2 வயது குழந்தையுடன் நியூயார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்றார். விமான பயணிகளுக்கு ஆம்லெட்டுடன் கூடிய மதிய உணவு கொடுக்கப்பட்டது. அதனை வாங்கி சுயிஷா தனது குழந்தைக்கு ஊட்டியபடி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது 'ஆம்லெட்'டில் ஒரு கரப்பான் பூச்சி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் அலறி அடித்து கொண்டு விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். அவர்கள் பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர். ஆத்திரமடைந்த சுயிஷா, தனது மொபைல் போனில் ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி இருந்ததை வீடியோவாக எடுத்து கொண்டார். நியூயார்க் நகரில் விமானம் தரையிறங்கிய உடனேயே ஏர் இந்தியா நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதற்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் சுயிஷா கோபத்தில், 'ஆம்லெட்'டில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'டில்லியில் இருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எனக்கு பரிமாறப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்தது. இதை நாங்கள் கண்டுபிடித்தபோது எனது 2 வயது குழந்தை என்னுடன் பாதிக்கு மேல் உணவை சாப்பிட்டு முடித்தது. இதனால் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டார்' என குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Anantharaman Srinivasan
செப் 29, 2024 21:47

டாடா ஏர் இந்தியாவை எடுத்த நேரம் மாத்தி மாத்தி புகார் மேல் புகார். நஷ்டத்தை சந்தித்துக்கொண்டு யிருக்கிறார்.


அதிஷா
செப் 29, 2024 20:49

மேக் இன் இந்தியா டோய்...


வைகுண்டேஸ்வரன்
செப் 29, 2024 17:26

டாடா வந்து தேவையில்லாத ஆணியேல்லாம் புடுங்குவார் னு கூவினார்கள். ஏர் இந்தியாவை அடிமாட்டு விலைக்கு டாடா வுக்கு கொடுத்து விட்டு, கோடிகளை இலக்டோரல் பாண்ட் மூலம் டாட்டா கிட்ட பிஜேபி வாங்கிப் போட்டுக்கிட்டது. எனவே எதுவும் பேசாது. பிற பிஜேபி ஆட்கள் இதுக்கு சால்ஜாப்பு எழுதிப்பாங்க


Apposthalan samlin
செப் 29, 2024 16:55

முதன் முதலாக வெளி நாட்டுக்கு வரும் பொழுது புக் பண்ணி விட்டார்கள் ஒரே மூட்டை பூச்சி கடி கொசு கடி அதற்கு பின்னர் இது வரை பயணித்தது இல்லை .


INDIAN
செப் 29, 2024 15:03

நான் நிறைய முறை ஏர் இந்தியாவில் பயணம் சென்றுள்ளேன் , அனால் நான் இந்த மாதிரியான தவறுகள் நேரில் பார்க்கவில்லை, சில நேரங்களில் மேல் கவர் கியீண்டுவிடும் , அதனால் விமானத்தில் முன்பே உள்ள கரப்பான் உள்ளே சென்றிருக்கலாம், இதுபோன்று எல்லா விமானத்திலும் ஏற்படுவது உண்டு அனால் ஏர் இந்தியாவில் மற்றும் இந்த மதிரான செய்திகள் வருகின்றது . சிந்திக்க வேண்டியுள்ளது


skv srinivasankrishnaveni
அக் 18, 2024 12:08

நானும் பலமுறை ஏர் இந்தியாலே ட்ரவல் பண்ணிருக்கேன் இதுபோல நேராவே இல்லிங்க


Sck
செப் 29, 2024 14:50

நான் கடந்த 32 வருடங்களாக விமானத்தில் பயணக்கிறேன். இரண்டு நாள் முன்பு வரை அம்ஸ்டரடாம் சென்று திரும்பினேன். ஆனால், கடவுள் அநுகரஹதால் ஒரு முறை கூட ஏர் இந்தியாவில் பயணத்ததில்லை என்பதை பெருமையுடன் சொல்கிறேன். எனக்கு இந்தியர்கள் மீதும், அவர்கள் தரும் சேவைகள் மீதும் துளியும் நம்பிக்கை இல்லை. சோம்பேறிதனமும், அசட்டை போக்குமே அதற்கு காரணம். இதோ ஏர் இண்டியாவை டாடா நிறுவனம் கையகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிலபல குறைகளை நீக்க அவகாசம் தேவைதான் மறுக்கவில்லை, ஆனால் வாடிக்கையாளர்களின் தேவைகளிலேயே சொதப்பினால், எப்படி நம்பிக்கை வரும். எனக்கு தெரிந்த ஒரே வழி, டாடா அவபெயரில் இருந்து தப்பிக்க, இந்த விமான சேவையை இழுத்து மூடினால் என்ன??


Kannan Chandran
செப் 29, 2024 14:17

இது முற்றிலும் AIR INDIA- வின் பிரச்சனையல்ல Tajsats -என்ற catering service-ன் குறைபாடே.


morlot
செப் 29, 2024 14:07

I think it is better to spend more to fly in a decent airlines.I stoped flying with air india to France since 1992.Even at paris the travel agent wont recommend you air india.Of course it is cheaper but worst service.


narayanansagmailcom
செப் 29, 2024 13:12

Everyone is lethargic and no one want to take responsibility. Management should dismiss such staff and give punishment to realise their duty.


Ganapathy
செப் 29, 2024 13:07

தெரிஞ்சேதானே காசு கம்மியாயிருக்குன்னு போறீங்க..அந்த இழவு விமானத்துல தெரிஞ்சே போயிட்டு கூவுனா எப்படி? எமிரேட்ஸ் எதிஹாத் இப்படி நல்ல விமானங்கள்ல போங்க இனிமேயாச்சும்


Sck
செப் 29, 2024 14:50

கரெக்ட். I support your statement.