உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதையில் வந்த ஏர் இந்தியா விமானி: தடுத்து நிறுத்திய கனடா அதிகாரிகள்

போதையில் வந்த ஏர் இந்தியா விமானி: தடுத்து நிறுத்திய கனடா அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கனடாவில் இருந்து இந்தியா கிளம்ப இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கவேண்டிய விமானியிடம் இருந்து ஆல்கஹால் வாசனை வந்ததால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்தனர். இச்சம்பவம் கடந்த மாதம் டிச.,23 ம் தேதி நடந்துள்ளது.கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து டில்லிக்கு வர இருந்த விமானத்தை அந்த விமானி இயக்க இருந்தார். விமான நிலையத்தில் இருந்த கடை ஒன்றில்,அவர் மதுபானம் வாங்கிய போது அல்லது அருந்தியதை பார்த்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் ப்ரீத் அனாலிசர் சோதனை நடத்தினர். அதில் அவர் தோல்வி அடைந்ததால், அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வான்கூவர் நகரில் இருந்து டில்லிக்கு வர வேண்டிய விமானம், கிளம்புவதில் கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. விமானியின் உடல் தகுதியில் கனடா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு அவரை அழைத்து சென்றனர். பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு மாற்று விமானி மூலம் அந்த விமானம் இயக்கப்பட்டது. இதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N.Purushothaman
ஜன 02, 2026 07:12

மது அருந்திவிட்டு விமானம் இயக்க கூடாது என்பது அவருக்கும் தெரியாதா என்ன? தற்போது கனடா, அமேரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் கடும் பனி மற்றும் குளிர் நிலவுகிறது. அதிக குளிர் காரணமாக மது அருந்தி இருக்கலாம் அல்லது பணிக்கு செல்ல மனம் இல்லாமல் வேண்டுமென்ற இவ்வாறு செய்து இருக்கலாம் ..


சண்முகம்
ஜன 02, 2026 06:40

ஒவ்வொரு பிளைட் முன்னரும் விமானிகள் கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன் இந்திய விமான நிலையங்களில் இந்த நடைமுறை இருந்தது. இப்பொழுது எப்படி தெரியவில்லை.


V Venkatachalam, Chennai-87
ஜன 01, 2026 22:11

இது இந்தியாவின் கவுரவத்தை கெடுக்கும். நம் நாட்டு விமானியை இன்னொரு நாட்டில் இன்னொருவர் விசாரிப்பது கேவலம். இந்த விமானியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அப்போ தான் மற்ற விமானிகள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.இந்த செயதி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.


MARUTHU PANDIAR
ஜன 01, 2026 21:56

கேவலம். மிக மிக கேவலம். இவனை உடனே டிஸ்மிஸ் செய்யணும்.ஏர் இந்தியா அரசு கையில் இருந்த போது கூட ஒழுங்கா இருந்தது.


அப்பாவி
ஜன 01, 2026 19:57

சின்னதா ஒரு கட்டிங் போட்டேன். அதுக்கே இப்பிடியா? நான் ஓட்டப் பிறது ஏர் இந்தியா விமானம். பயமில்லாம ஓட்ட வாணாமா?


vivek
ஜன 01, 2026 20:34

அப்பாவி உன்னால தள்ளடமா வீட்டுக்கு போய் சேரமுடியுமா??


Karunai illaa Nidhi
ஜன 01, 2026 19:13

திமுக காரன் தான் இந்த வேலை செஞ்சிருப்பான்


P.sivakumar
ஜன 01, 2026 18:03

தமிழ்நாட்டுல இருந்து போன பைலட்டாக இருக்குமோ?


பிரேம்ஜி
ஜன 01, 2026 17:29

இந்தியன்னா கெத்து தான்!


vivek
ஜன 01, 2026 18:12

உன்னை போல திருட்டு களவாணி போல...