உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கை அவசரத்தில் தயாரிக்கப்பட்டது; இந்திய விமானிகள் சங்கம் குற்றச்சாட்டு

ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கை அவசரத்தில் தயாரிக்கப்பட்டது; இந்திய விமானிகள் சங்கம் குற்றச்சாட்டு

புதுடில்லி : குஜராத்தில், 'ஏர் இந்தியா' விமான விபத்தில் 260 பேரின் உயிரிழப்பு பற்றி வெளியிடப்பட்ட முதற் கட்ட அறிக்கை, அவ சரமாகவும், அழுத்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானிகள் சங் கம் ஆட்சேபம் தெரிவித்து உ ள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பயணியருடன் ஏர் இந்தியா விமானம், ஐரோப்பிய நாடான பிரிட்டன் புறப்பட்டது. சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக்கல்லுாரி விடுதியில் விழுந்து விபத்துக்குஉள்ளானது. இதில், 260 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பிரிவு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானத்திற்கு செல்ல வேண்டிய எரிபொருள் வால்வு, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டதே விபத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டியது. பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தது. குறிப்பாக, இந்த விபத்திற்கு விமான பைலட்டுகளே காரணம் என சுட்டிக்காட்டியதுடன், அதற்குரிய காரணங்களையும் அடுக்கியது. இது குறித்து இந்திய விமானிகள் சங்கத்தினர், விமான விபத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளை நேற்று சந்தித்து, தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த சாம் தாமஸ் கூறுகையில், “விமான விபத்து தொடர்பான முதல் அறிக்கை முன்கூட்டியே வெளியிட நிறைய அழுத்தம் இருந்தது. அவசரமாக தயாரிக்கப்பட்டது போல் இருந்தது. “ இந்த விவகாரத்தில் யார் யாரை வேண்டுமானாலும் குற்றஞ்சாட்ட வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேவையற்ற ஊகங்களுக்கும் அந்த அறிக்கை வழிவகுத்தது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை