உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 270 பேர் பலியாகினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ev34ltzi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூன் 17) ஏர் இந்தியாவின் விமானம் (எண் AI 159) ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்தது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, லண்டன் செல்லும் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திலிருந்து டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு (6E 2706) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் 157 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். விமானத்தில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் கண்டறியவில்லை. இதனால், சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M. PALANIAPPAN, KERALA
ஜூன் 17, 2025 16:58

ஏர் இந்தியா விமானங்கள் மட்டும் பழுது ஆவது எப்படி?


Kalyanaraman
ஜூன் 17, 2025 15:41

ஏர் இந்தியா விமானங்கள் இத்தனை காலம் இல்லாமல் இப்போதுதான் அடிக்கடி விமானம் பழுதாகிறது. இந்தியாவுக்கு எதிராக இதை பராமரிக்கும் துருக்கி கம்பெனியின் சதியா? ஏர் இந்தியா அல்லது அமெரிக்க ஏர்பஸ் கம்பெனிக்கு எதிரான சதியா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 21:40

தன்னோட தவறுகளுக்கு இப்படி அடுத்தவர்களை குறை சொல்லும் உன் ப்ளடி இன்டியன் மனப்பாங்கு தான் இந்தியா இப்படி தரமற்ற கூட்டமாக இருக்கிறது.


Palanisamy Sekar
ஜூன் 17, 2025 15:33

இது தெரிந்த சமாச்சாரம்தான்..எப்போதுமே தாமதமான பயணம், எப்போதுமே தொழில் நுட்ப கோளாறு. இதுதான் ஏர் இந்தியா. உண்மையில் சில காலத்துக்கு ஏர் இந்திய விமானப்பயணங்களை ரத்துசெய்துவிட்டு அணைத்து விமானங்களையும் பழுதுபார்த்துவிட்டு பின்னர் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வதுதான் ஏர் இந்தியாவின் பெயரை காப்பாற்றும். இல்லையேல் பயத்துடனே பயணிக்கணும். வேண்டாமே விபரீத பயணம்.


அசோகன்
ஜூன் 17, 2025 15:14

தூருக்கியுடனான மைண்டெனன்ஸ் காண்ட்ராக்ட் ஐ முறிக்கவேண்டும்


Anantharaman Srinivasan
ஜூன் 17, 2025 14:51

டாடா ஏர் இந்தியா விமானங்களை வாங்கியது முதல் பிரச்னைக்கு மேல் பிரச்னை நஷ்டம் தான். பேசாமல் விற்று விட்டு வெளி வந்து விடலாம்.


Barakat Ali
ஜூன் 17, 2025 14:47

ஏர் இந்தியா மட்டும் டார்கெட் செய்யப்படுகிறதா ????


இராம தாசன்
ஜூன் 17, 2025 16:53

ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இதை்ததான் செய்கின்றன


Anantharaman Srinivasan
ஜூன் 17, 2025 14:47

விமான பயணமே இனி ஆபத்து தான் என நினைக்க தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை