உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசமான வானிலையால் விமான சேவை பாதிப்பு; இன்று 67 இண்டிகோ விமானங்கள் ரத்து

மோசமான வானிலையால் விமான சேவை பாதிப்பு; இன்று 67 இண்டிகோ விமானங்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று மட்டும் 67 விமானங்களின் சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.நாடு முழுவதும் பரவலான மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக, உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அகர்தலா, சண்டிகர், டேராடூன், வாரணாசி மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் முன்னறிவிக்கப்பட்ட மோசமான வானிலை காரணமாக 67 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.விமானிகளுக்கான அதிக ஓய்வு நேரம் தொடர்பான விதிகள் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் இம்மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு, டிஜிசிஏ, இணை டிஜி சஞ்சய் பிரஹமானே மற்றும் துணை டிஜி அமித் குப்தா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் சிஓஓ இசிட்ரே போர்குராஸ் ஆகியோரை இந்தக் குழு ஏற்கனவே விசாரித்துள்ளது. இந்தக் குழு இந்த வார இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தான் இண்டிகோ விமானங்களின் சேவை மெல்ல மெல்ல மீண்டும் இயல்புக்கு திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 26, 2025 15:40

நேருதான் காரணம்னு நான் சொல்றேன்


kumar
டிச 25, 2025 20:43

இண்டிகோ விமான நிறுவனத்தால் தொடர்ந்து பிரச்சினைகள் தான் வருகிறது இழுத்து மூடி விடலாம் மக்கள் நிம்மதியாகவாக இருப்பார்கள்


visu
டிச 25, 2025 21:12

விருப்பமில்லாதவர்கள் பயனம் செய்யாவிட்டால் எல்லோருக்குமே நிம்மதி .இங்க கருது மட்டும் போட்டு என்ன பலன் எல்லா தனியார் நிறுவனத்தையும் மூடிவிட்டு என்ன செய்வது பிரச்சினை வரத்தான் செய்யும்


முக்கிய வீடியோ