உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நம் நாட்டில் விரைவில், எலக்ட்ரிக் விமான டாக்ஸி சேவைகள் துவங்கவுள்ளன. அதற்கான கள சோதனைகள் நடந்து வருவதாக விண்வெளித் துறை சார்ந்த, 'ஸ்டார்ட்அப்' நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்களை போல, வருங்காலத்தில் வான் வழியே பயணிக்கும், 'ஏர் டாக்சி' சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில், சர்வதேச நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன. அந்நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' 'எலக்ட்ரிக் ஏர் டாக்சி'களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. வரும், 2028க்குள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரியில், டில்லியில் நடந்த கண்காட்சியின் போது, 'சூன்யா' என்ற ஏர் டாக்ஸி மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அடுத்த தலைமுறை விமான சேவைகளை மேம்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள சோதனை மையத்தில், 'எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆப் - லேண்டிங்' எனப்படும், தரையில் இருந்தபடி அப்படியே மேலெழும்புவது, தரையிறங்குவதற்கான கள சோதனைகள் நடந்து வருகின்றன. கடந்த ஒன்பது மாதத்தில் இத்திட்டம் மிக முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. பொறியியல் அளவு, செயல்படுத்தும் வேகம் ஆகிய சோதனைகள் திருப்திகரமாக அமைந்து இருக்கின்றன. எஸ்.ஒய்.எல்.எக்ஸ்.,-1 என பெயரிடப்பட்ட இந்த தனியார் ஏர் டாக்ஸி அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளம் அமைக்க அதானி திட்டம்

மஹாராஷ்டிராவின் நவி மும்பையில், 'ஏர் டாக்சி'களுக்கான தளம் அமைக்க, 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தரும்படி நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகமான, 'சிட்கோ'விடம் அதானி குழுமம் அனுமதி கோரியுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏர் டாக்சிகள் மூலம் பயணியருக்கு சேவை அளிக்கும் வகையில், அந்த நிலத்தில் தளம் அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. புனே மற்றும் மும்பையை இணைக்கும் வகையில், நவி மும்பை பகுதியை அதானி குழுமம் தேர்ந்தெடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Dharma
டிச 23, 2025 11:50

மாறன் ப்ரதர்ஸ் - கே டி ப்ரதர்ஸ்.


பா மாதவன்
டிச 23, 2025 08:59

நம் பாரதம் அனைத்து துறையிலும் முன்னேறுகிறது கண்டு நாம் பெருமைப் பட வேண்டும். நல்ல செயல்கள் யார் செய்தாலும் அதைப் பாராட்ட நல்ல மனம் வேண்டும். நல்வாழ்த்துக்கள். வாழ்க பாரதம். வளர்க பெருமைகள்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 23, 2025 04:24

நவி மும்பையில், ஏர் டாக்சிக்கான தளம் அமைக்க, 5 ஏக்கர் நிலத்தை தரும்படி அதானி குழுமம் அனுமதி கோரியுள்ளது. - அரசுக்கு 5 ரூ வருமானம்.


V Venkatachalam, Chennai-87
டிச 23, 2025 20:26

சென்னயில ஹஜ் பயணிகளை வளைத்து போட முகஸ் மாளிகை கட்டுறாரு. அதுனால டமில் நாடு கவர்மெண்டுக்கு ஜீரோ வருமானம். எவன் அப்பன் ஊட்டு பணம்?


ஜெய்ஹிந்த்புரம்
டிச 23, 2025 04:19

நம்ம ஜீ ஆட்சியில் “தனியார்” என்பவர் யாரெனில் அது அதானியார் தான்.


ராமகிருஷ்ணன்
டிச 23, 2025 06:38

அதாவது நம்ம விடியாத விடியல் ஆட்சியில் மாறன் குடும்பம், மாப்பிள்ளை குடும்பம் போல என்று சொல்ரீங்க, அவர்கள் இது போன்ற அறிவு சார்ந்த தொழில்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.


ponssasi
டிச 23, 2025 10:55

மாறன் brothers செய்ததெல்லாம் நாட்டுக்கு கேடு. வலுவான இலாக்காக்களை கையில் வைத்துக்கொண்டு அரசு தொலைக்காட்சி சேனலை நாசம் செய்து குடும்ப சேனலை வளர்த்தது. BSNL சேவையை திருட்டுத்தனமாக குடும்ப தொழிலுக்கு பயன்படுத்தி bsnl துறையை நாசம் செய்து ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு துறையை வளர்த்து ஆதாயமடைந்தனர், தொழிலதிபர் சிவசங்கரன் / டாடா / மலேசிய தொழிலதிபர் என இவர்கள் ஏமாற்றாத தொழிலதிபர்கள் இல்லை. உச்சகட்டமாக அவர்கள் கருணாநிதியையே ஏமாற்றினார்கள். திமுகாவிற்கு எதிராக suntv ஜெயலலிதாவுடன் கைகோர்க்க முயன்றனர். கேடி brothers பற்றி நன்கு அறிந்திருந்த ஜெயலலிதா இவர்கள் சேர்க்கவில்லை. மீண்டும் கருணாநிதியிடம் சரணடைய வேண்டியதாயிற்று. மீண்டும் உஷரான கருணாநிதி மீண்டும் அவர்களிடம் அதிகாரத்தை தராமல் திமுகாவில் ஒரு கிளை செயலர்க்கு என்ன அதிகாரமோ அதற்கும் கீழ் வைத்தார். பாவம் இன்று உதயநிதி, இன்பநிதிக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்


V Venkatachalam, Chennai-87
டிச 23, 2025 20:30

அதானிய விட்டா அந்த வேலையை ஒழுங்கா செய்ய எவன் இருக்கான்?