உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மென்பொருள் கோளாறு; டில்லி, மும்பை விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிப்பு

மென்பொருள் கோளாறு; டில்லி, மும்பை விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிப்பு

புதுடில்லி: மென்பொருள் கோளாறு காரணமாக, டில்லி, மும்பை உள்பட பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.டில்லி, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் இன்று காலை 6:45 மணி முதல் 7:28 மணி வரை சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதனால், பயணிகளை செக்-இன் செய்வதில் விமான நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டன. இதன் காரணமாக, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, சேவைகள் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக விமான நிறுவனங்களிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை