உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் ராஜினாமா

அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் ராஜினாமா

சண்டிகர் : சீக்கிய மத தலைமையால், மத ரீதியாக குற்றமிழைத்தவர் என அறிவிக்கப்பட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் நேற்று, தன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல், கடந்த 16 ஆண்டுகளாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். பஞ்சாபில் இவரது கட்சி ஆட்சியில் இருந்த 2007 - 2017 வரையிலான காலத்தில் நடந்த தவறுகளுக்காக, சீக்கிய மத தலைமையின் உயரிய அமைப்பான, 'அகால் தக்த்' இவரை மத ஒழுங்கீன குற்றவாளி என்று கடந்த ஆகஸ்டில் அறிவித்தது.இந்நிலையில், சுக்பிர் சிங் பாதல் நீண்ட காலமாக வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார்.புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில், கட்சி இறங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ