உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலாவதி உணவுப்பொருட்கள் விமானத்தில் வினியோகம்; கொந்தளித்த பயணியிடம் மன்னிப்பு கேட்டது ஆகாசா!

காலாவதி உணவுப்பொருட்கள் விமானத்தில் வினியோகம்; கொந்தளித்த பயணியிடம் மன்னிப்பு கேட்டது ஆகாசா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காலாவதியான உணவுப் பொருட்களை தருவதாக, ஆகாசா விமான பயணி புகார் அளித்தார். மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்துள்ளது.கோவிட் காலத்திற்கு பிறகு, விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாதம் தோறும் பயணம் செய்யும் பணிகளின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டு வருகிறது. அதேநேரத்தில், பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னையும் அதிகரித்து வருகிறது. கோரக்பூரிலிருந்து, பெங்களூருக்கு சென்ற QP 1883 என்ற ஆகாசா விமானத்தில், பயணிகளுக்கு காலாவதியான உணவுப் பொட்டலங்கள் விமான நிறுவனம் வழங்கியதாக பயணி ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

மன்னித்து விடுங்கள்!

தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் சமூகவலைதளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. ஆகாசா ஏர் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தரத்தை பூர்த்தி செய்யாத வகையில் கவனக்குறைவாக தரமற்ற சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒரு சில பயணிகளுக்கு காலாவதியான குளிர்பானங்கள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 09, 2024 21:44

இதையெல்லாம் சாப்புட்டு இம்யூனிட்டி அதிகமாய் எல்லா வியாதிகளையும் எதிர்த்து நீடூழி வாழ்வோம். நாமதான் வல்லரசு.


Lion Drsekar
செப் 09, 2024 14:58

ஒன்றுபட்ட பாரதம் , எங்கு ஏறினாலும் உணவு எதுவாக இருந்தால் யாரவது இறந்தால் மட்டுமே நடவடிக்கை பிறகு பழைய படி மீண்டும் கெட்டுப்போன உணவு விற்பனை, இதுதான் நடைமுறை, கலப்படத்தில் மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவது நமக்கு பெருமை வந்தே மாதரம்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 09, 2024 12:42

பஸ் பயணிகள் தான் கெட்டு போன தரம் தாழ்ந்த காலாவதியான குடி நீர் குளிர்பானங்கள் பஸ் நிலையம் டிரைவர் கண்டக்டர் பார்த்து நிறுத்துமிடங்களில் வாங்கி சாப்பிட வேண்டுமா? ஏன் ஏர்பஸ் பயணிகள் சாப்பிட கூடாத? சமூக நீதி வேண்டும் அல்லவா?


அப்பாவி
செப் 09, 2024 09:43

இந்தியாவுல எல்லாம் விலை மலிவு. ஷவர்மா கடையிலிருந்து ஏரோப்ளேன் வரை பழசு, ஊசிப் போனதை மலிவாக் குடுப்பாங்க. எதையும் வீணாக்காம சாப்புடுங்க.


Barakat Ali
செப் 09, 2024 08:56

இந்தியாவின் வாரன் பஃபட் என்று அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவரது நிறுவனம்தான் ஆகாசா .... ராகேஷின் மனைவி தற்பொழுது இதை நடத்துகிறார் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை