உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்தில் புகைபிடித்த ஆலப்புழா நபர் கைது

விமானத்தில் புகைபிடித்த ஆலப்புழா நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புகைபிடித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மன்னாரைச் சேர்ந்த 54 வயதுடைய நபர், சவுதி அரேபியா நாட்டின் தம்மாமில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வந்தார். அப்போது அவர் கழிப்பறையில் லைட்டரைப் பயன்படுத்தி, சிகரெட்டைப் பற்ற வைத்தார். இதனால் விமானத்தில் தீ அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. விமான ஊழியர்கள் எங்கு தீப்பற்றியது என அங்கும் இங்கும் தேடினர். இருக்கையில் இருக்கும் பயணிகள் யாரும் இந்த வேலையை செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கடைசியில், கழிப்பறையில் இருந்த பயணி லைட்டர் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து விமானம் கேரளாவில் தரை இறங்கியவுடன் அந்த பயணி போலீசிடம் ஓப்படைக்கப்பட்டார்.லைட்டர்கள் உட்பட எந்த ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் எதுவும் விமானத்தில் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. குறிப்பிட்ட அந்த பயணி, விமானத்தில் ஏறும்போது லைட்டரை பதுக்கி வைத்து கொண்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஏர் இந்தியா அதிகாரியின் புகாரின் அடிப்படையில் வலியதுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கவனக்குறைவாக நடந்து கொண்டதற்காக அவரை எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Suresh Rajagopal
மார் 07, 2025 07:47

அந்த நபருக்கு பெயர் எதுவும் கிடையாதோ?


kulandai kannan
மார் 04, 2025 14:10

சேட்டன் என்றாலே சேட்டைதான்.


chennai sivakumar
மார் 03, 2025 19:07

அப்படியே அந்த செக்யூரிட்டி செக் செய்தவர்களையும் உள்ளே தள்ளுங்க.


வாய்மையே வெல்லும்
மார் 03, 2025 18:53

ஆட்டு குட்டி கழிப்பறையில் முட்டை யிட்டு மாட்டிக்கிட்ட பின்னே திருட்டுமுழி கோழிக்குஞ்சு வந்த கதை..இந்த ஆட்டோட நல்லநேரம் இந்திய வருகையின் போது மாட்டி இருக்கிறான் இதே சவூதி போகும்போது செய்து இருந்தால் .. சவுதியில் இவனுக்கு லாடம் அடிச்சு விட்டு இருப்பாங்க. திருந்தாத கள்ள ஆடு சாமி இவன்


Sriniv
மார் 03, 2025 17:55

How was the lighter not detected in the Security check ? Very poor security check. If today its a lighter that is smuggled into the plane, tomorrow it could be something else...


theruvasagan
மார் 03, 2025 17:35

அந்த மர்ம நபரின் பேரையும் போட்டோவையும் வெளியிட்டால் ராஜாங்க ரகசியம் பொது வெளியில் கசித்து விடும். அதான் போடல.


C.SRIRAM
மார் 03, 2025 17:09

குற்றம் செய்த நபரின் பெயர் மற்றும் போட்டோ போடுவதில் என்ன தயக்கம் . இந்த கிரிமினல் கூமுட்டைக்கு வாழ் நாள் நிரந்தர விமான பயண தடை எக்காலத்திலும் நீக்க முடியாத படி உடனடியாக அமல் செய்யவேண்டும் . மேலும் இந்த கூமுட்டையின் குடும்பத்தினருக்கும் இந்த தடை உடனடி தேவை . ஏதோ எச்சரித்தார்களாம் . கேடு கெட்ட அமைப்புகள் .


M. PALANIAPPAN, KERALA
மார் 03, 2025 17:04

அப்படி என்ன புகை பிடிக்க அவசியம், குறைந்த தூர பயணத்தில் கூட புகை பிடிக்காமல் இருக்க முடியாதா ? அதுவும் லைட்டர் போன்ற பொருள்களை கொண்டு செல்ல தடை உள்ளபோது


புதிய வீடியோ