உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புண்ணிய தலங்களில் மது விலக்கு: விரைவில் முடிவு என்கிறார் முதல்வர்

புண்ணிய தலங்களில் மது விலக்கு: விரைவில் முடிவு என்கிறார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: 'மத்திய பிரதேசத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து அரசு, துறவிகளின் பரிந்துரைகளை பரிசீலித்து வருகிறது' என்று முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.போபாலில் மோகன் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவில்கள் மிகுந்த ஊர்களின் புனிதத்தன்மை உறுதி செய்வதற்காக, மதுவிலக்கு குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இது தொடர்பாக துறவிகள் அளித்த பரிந்துரைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. அரசு விரைவில் முடிவு செய்யும்.நடப்பு பட்ஜெட் ஆண்டு முடிவடையப் போகிறது. மத நகரங்களில் எங்கள் கொள்கையைத் திருத்தி, மதுவைத் தடை செய்வதை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அரசுயோசித்து வருகிறது.பல துறவிகள் இதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். மேலும் மதச் சூழல் குறித்து மக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத நகரங்களின் எல்லைக்குள் உள்ள இந்த மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. நாங்கள் தீவிரமாக இருக்கிறோம், விரைவில் இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்போம்.இவ்வாறு மோகன் யாதவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Easwar Kamal
ஜன 13, 2025 22:52

இதை epodhae அமல் படுத்தி இருக்கலாம். கோவில் மட்டும் அல்ல பள்ளி, கல்லூரி மற்றும் குடும்பங்கள் இருக்கின்ற தெரு. inguthen குடித்தி விட்டு நம்ம குடி magnagal செய்கின்ற அலப்பறை கொஞ்சம் நஞ்சம் அல்ல. பிஜேபி இவற்றை செய்தல் மக்கள் மனதில் இடம் பெறலாம்.


தாமரை மலர்கிறது
ஜன 13, 2025 21:29

புண்ணிய தளங்களில் மாமிசக்கடைகளையும் தடை செய்ய வேண்டும்.


Karthik
ஜன 13, 2025 18:51

சிறப்பு.. நல்ல முன்மாதிரி..


ராமகிருஷ்ணன்
ஜன 13, 2025 18:42

விடியல் அரசின் கொள்கையின் படி கிறுத்தவ, முஸ்லிம் மக்களின் வழிபாட்டு தலங்களில் மட்டுமே மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அருகில் நிறைய டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும்


அப்பாவி
ஜன 13, 2025 18:08

இது கர்ம பூமி. எல்லாமே புண்ணியஸ்தலம். ஒவ்வொரு பிடிமண்ணும் வைகுண்டம் .கைலாசம் . அப்பிடி உருட்டித்தானே கட்டமைச்சிருக்கீங்க


புதிய வீடியோ