உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை ரத்து: மத்திய கல்வித்துறை அறிவிப்பு

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை ரத்து: மத்திய கல்வித்துறை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது; அவர்கள் தேர்வில் தோல்வியுற்றால், 2 மாதங்களில் மறு தேர்வு எழுத வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் ஓராண்டு மீண்டும் படிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lqmhbsp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=05 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனி மேல் 5 மற்றும் 8ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது. அந்த வகுப்பு மாணவர்கள் ஆண்டுத்தேர்வில் தோல்வியுற்றால் 2 மாதங்களில் துணை தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். .அப்போதும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறையானது, நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் ஆகிய 3000 மத்திய அரசு பள்ளிகளுக்கு பொருந்தும்.இவ்வாறு சஞ்சய் குமார் கூறியுள்ளார்.ஏற்கனவே 16 மாநில அரசுகள், டில்லி உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்கள் கட்டாய தேர்ச்சி முறையை கைவிட்டு விட்டன. மற்ற மாநில அரசுகள், இது பற்றி தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

N Srinivasan
டிச 23, 2024 21:43

This is applicable for CBSE not for TN Govt schools


hari
டிச 23, 2024 21:40

ஸ்டாலின் இன்னும் ஓகே சொல்லவே இல்லை...அதுக்குள்ள யாரு இந்த முந்திரிக்கொட்டை


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 20:29

ஸ்டாலின் அரசின் மற்றொரு சிறப்பான சீர்திருத்தம். பாராட்டுக்கள். 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று இ பி எஸ் அறிவித்ததைக் கண்டித்தவர்கள் நிச்சயம் இதைப் பாராட்டத் தான் வேண்டும்.


ghee
டிச 23, 2024 21:27

அய்யா வைகுண்டம்.இது மத்திய அரசின் அறிவிப்பு.....நீங்கள் கஷ்டபட்டு ஸ்டிக்கர் ஒட்டவெண்டாம்.....மாநில அரசு சொன்னவுடன் நீங்க ஒத்து உதாளம்


veera
டிச 23, 2024 21:34

அவசர குடுக்கை வைகு. ....கொஞ்சம் வெயிட் பண்ணி ஸ்டிக்கர் ஒட்டுங்க


Duruvesan
டிச 23, 2024 22:28

மடரச டிகிரி உனக்கு புத்தி கம்மி, இப்போ கூட உங்க மினிட்ர் 8 வது வரை ஆல் பாஸ்ணு கூவிக்கிறார்


ghee
டிச 24, 2024 07:09

முகத்தில் கரிய பூசியாரு கல்வி அமைச்சர்


சாமிநாதன்,மன்னார்குடி
டிச 24, 2024 10:29

எல்லாத்துக்கும் முட்டுக் கொடுக்காத ஆறாவது அறிவை கொஞ்சமாவது யூஸ் பண்ணி கருத்தை போடகற்றுக் கொள்.


Karthik
டிச 23, 2024 20:05

இது சரியான ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவே ... அணைத்து மாநிலங்களும் இதை பின்பற்றலாமே ... CM அனுமதிப்பாரா ??


Nagarajan D
டிச 23, 2024 20:02

மிக நல்ல முடிவு... திராவிட ஆட்சியாளர்கள் விட மாட்டார்களே... 10 வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கணக்கில் பெருக்குவதும் தெரிவதில்லை வகுத்தலும் தெரிவதில்லை... ஆங்கிலத்தில் பெயர் எழுத கூட தெரிவதில்லை. தமிழ் வளர்த்த திராவிட ஆட்சியாளர்களின் அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவமாணவிகளுக்கு தமிழ் மாதங்கள் பெயர் கூட தெரிவதில்லை...


தமிழ்வேள்
டிச 23, 2024 19:51

1990 வரை முதல் வகுப்புக்கூட ஆண்டில் மூன்று தேர்வுகள் மாதாந்திர தேர்வுகள் என அனைத்தும் இருந்தன..அன்றும் ஆண்டுத்தேர்வில் தேறவில்லை என்றால் ஃபெயில் மட்டுமே..சப்ளிமென்டரி தேர்வு கதையெல்லாம் இல்லை..அப்போதும் மன அழுத்தம் மண்ணாங்கட்டி என்று எவனும் உருட்ட வில்லை...மாணவர்களை கோழைகளாக்கி திராவிட அடிமைகள் குடிகாரர்கள் போதை அடிமைகள் ஆக்கி தான் மட்டுமே வாழ்வது திருட்டு திமுக கும்பல் மட்டுமே... அனைத்து திராவிட கட்சிகளுமே இதில் அடக்கம் தான்


M S RAGHUNATHAN
டிச 23, 2024 19:24

இந்த உத்தரவு நம் திராவிட மாடலுக்கு பொருந்தாது. நாங்கள் 12 வகுப்பு வரை all pass முறை கொண்டு வரப் போகிறோம் என்று அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் நம் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிக்கை விடப் போகிறார்.


ஆரூர் ரங்
டிச 23, 2024 19:23

இடைநிற்றலைத் தடுக்கவே ஆல் பாஸ் அமல்படுத்தப் பட்டது.. திறனற்ற ஆசிரியர்கள் அதனை தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்தினர்.ஏழை முதல்தலைமுறை மாணவர்கள் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கைகள் தேவை. இல்லையெனில் பழையபடி பெற்றவர்களின் வழியில் குழந்தைத் தொழிலாளர்களாக ஆகிவிடுவர்.


R.Kumaresan
டிச 23, 2024 19:19

மத்திய அரசு மாணவர்கள் 5 முதல் 8 ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும், ரத்து செய்ய கூடாது. R.Kumaresan


Rathnam Mm
டிச 23, 2024 19:02

Wonderful, Excellent Decision Answer sheet to be verified other school, not at the same school.


சமீபத்திய செய்தி