உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி

அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மனதார நம்புகிறேன். யாத்ரீகர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை 3ல் தொடங்கி ஆகஸ்ட் 9ல் முடிகிறது. புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன என்று ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, முன்பதிவு 10 சதவீதம் குறைந்துள்ளது. அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக புனித யாத்திரை வரும் பக்தர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக முன்பதிவுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின், உமர் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறவும், பிரார்த்தனை செய்து விட்டுயாத்ரீகர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பவும், அதிகமான யாத்ரீகர்கள் வருவார்கள் என்றும் நாங்கள் மனதார நம்புகிறோம். பிரார்த்தனை செய்கிறோம். அமர்நாத் யாத்திரை வரும் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணைநிலை கவர்னர் இரண்டு முக்கிய கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார். ஒன்று அரசியல் தலைவர்களுடனும், மற்றொன்று பாதுகாப்பு அளிப்பது தொடர்பான கூட்டத்திலும் பங்கேற்றார்.யாத்ரீகர்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜம்முவில் இருந்து யாத்திரை கொடியசைத்துத் தொடங்கப்படும். யாத்ரீகர்கள் வந்தவுடன் அன்புடன் வரவேற்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஜூலை 01, 2025 08:12

இவன் இப்படி பேசுவதை பார்த்தால்.... இதில் எதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது.... வடிவேலு ஒரு படத்தில் கூறுவார்.... என் தெருவுக்கு வந்து பாரேன் என்று.... அது போல் இருக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஜூலை 01, 2025 05:45

இன்னுமொறு பெகல்காம் சம்பவம் நடந்தால் தண்டனை உனக்கும் உண்டு, நீயே ராஜினாமா செய்ய வேண்டும்


Palanisamy T
ஜூலை 01, 2025 04:34

Gnana Subramani - நீங்கள் சொல்வது சரிதான். காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் உள்துறை அமைச்சரின் கையில். காஷ்மீரில் அன்று நடந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் அங்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்று அவர் தன் அமைச்சர்ப் பதவியை முன்வந்து ராஜினாமா செய்திருக்கவேண்டும். அவர் செய்யவில்லை. அவரின் கவனமெல்லாம் தமிழகத்தை திராவிடக் கட்சிகளிடமிருந்து மீட்டு அங்கு பாஜக ஆட்சியை என்ன விலைக் கொடுத்தாவது அமைக்க வேண்டும். அவருக்கென்று தமிழகத்தில் கைத்த்ட்ட ஒரு கூட்டம். ஒருவேளை பாஜக தமிழகத்தில் ஆட்சிச் செய்ய நேரிட்டால் நாளை பாதிக்கப் படப்போவது தமிழகம் தான். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதல்களை அவர் முன் கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அவர் தடுத்திருக்கலாம். நாளை தமிழகத்தில் நடக்கப் போகும் தேர்தலில் யார் வரவேண்டுமென்பதை மக்களே முடிவுச் செய்யட்டும்


SENTHIL NATHAN
ஜூன் 30, 2025 18:46

இந்துக்கள் சூடு சொறனையற்றஸர்கள் என்று மீன்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது. இருபத்தாறு பேர் இந்துக்கள் என்பதால் மட்டுமே சுட்டுகொல்லப்பட்டணர். அந்த இடத்திற்கு இந்துக்கள் திரும்ப செல்வது என்பது எவ்வளவு கேவலமாணது??????


பெரிய குத்தூசி
ஜூன் 30, 2025 18:39

அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி. இப்படி இந்த முதல்வர் பேட்டி கொடுக்கிறார் என்றால் டெர்ரர்ரிஸ்தானுடன் சேர்ந்து ஏதோ சம்பவம் செய்ய போறாருனு தெரியுது. இவர்க்கு தெரியாம காஷ்மீரில் ஒரு தீவிரவாதியும் நுழைய முடியாது. பாதுகாப்பு முகமைகள் உஷார் . ஜைஹிந்த்


Gnana Subramani
ஜூன் 30, 2025 22:27

காஷ்மீரின் மொத்த பாதுகாப்பும் அமித் ஷாவின் கையில் தான் உள்ளது. மாநில அரசிடம் கிடையாது


Nada Rajan
ஜூன் 30, 2025 17:33

ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை