ஆச்சரியம் அளிக்கிறது!
பீஹாரில் பெண்களுக்கு, 10,000 ரூபாய் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்தியதே, தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணம். ஆனால், தேர்தல் நடைமுறைக்கு இடையே இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது ஆச்சரியம் அளிக்கிறது. சரத் பவார் தலைவர், தேசியவாத காங்., சரத் சந்திரபவார் பிரிவுஅச்சத்தில் ஆதரவு!
பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் காட்டாட்சி மீண்டும் அமைந்து விடும் என்ற அச்சத்தில், எங்கள் கட்சிக்கு ஓட்டளிக்க இருந்த ஒரு பகுதி வாக்காளர்கள், தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். மக்களுக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் பிரச்னை இருப்பதாக உணர்கிறேன். உதய் சிங் தேசிய தலைவர், ஜன் சுராஜ்நக்சல்களின் இறுதி மூச்சு!
சத்தீஸ்கரில் நக்சல்களின் இறுதி மூச்சு மட்டுமே தற்போது உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 2,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு, சரண் அடைந்துள்ளனர். அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் மாதம், 10,000 ரூபாய் நிதியுதவி அளிக்கிறோம். விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,