உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2024ம் ஆண்டு யூடியூப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்த அம்பானி மகன் திருமணம், ஐ.பி.எல்.,!

2024ம் ஆண்டு யூடியூப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்த அம்பானி மகன் திருமணம், ஐ.பி.எல்.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2024ம் ஆண்டு யூடியூப் டிரெண்டிங் பட்டியலில், அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம், ஐ.பி.எல்., கேமர் அஜ்ஜு பாய், செர்பிய கலைஞரின் வீடியோக்கள் இடம்பிடித்துள்ளன.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொழுதுபோக்காக இருப்பது யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளம் தான். அந்தவகையில், தெரியாத விஷயங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள பயன்படுத்துவது யூடியூப் சமூகவலைதளம் உதவியாக இருந்து வருகிறது. யூடியூப் இணையத்தில் அனைத்து விதமான விஷயங்கள் குறித்தும் வீடியோக்கள் இடம்பெற்று இருக்கும். 2024ம் ஆண்டு யூடியூப் டிரெண்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் குறித்து பதிவிடப்பட்ட வீடியோக்களை 650 கோடி பேர் பார்த்துள்ளனர். பிரமிக்க வைக்கும் ஆடைகள் மற்றும் பிரபலமான நிறைய பேர் விருந்தினர்களாக பங்கேற்றது தான் பயனர்களை ஈர்த்ததுக்கு காரணம். கேமிங் வீடியோக்களை கேமர் அஜ்ஜு பாய் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோவை, 4 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் டிரெண்டிங் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. செர்பிய கலைஞரின் கவர்ச்சியான மெல்லிசை கச்சேரி வீடியோக்கள் அதிகமான பயனர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டி20 உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல்., தொடர்பான வீடியோக்களை 700 கோடி பேர் பார்த்துள்ளனர். பாடகரும், நடிகருமான தில்சித் டோசாஞ்ச், கச்சேரி வீடியோக்கள், லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமான பயனர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் 9ம் தேதி தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்த அன்று அவரது தொடர்பான வீடியோக்களை அதிகமானோர் பார்த்துள்ளனர். பிரபல நடிகர்கள் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வீடியோக்களை அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனால் இந்த வீடியோக்கள் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
டிச 06, 2024 08:56

இரண்டுமே பணத்திமிரின் வெளிப்பாடு வரும் ஷோ இதனால் மக்களுக்கு ஒரு பிரயோசனம் இல்லை என்ன ஐயா மக்கள் ஷோவ்விற்கு தானே மயங்குகிறான் அதை இவர்கள் மூலதனம் ஆகி கொள்கிறார்கள் அனைத்தும் வியாபார மயம் ஆகி விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை