உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'அம்பேத்கரின் இறுதி சடங்குகளை டில்லியில் செய்ய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை,' என்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.உ.பி., மாநிலம் லக்னோவில் 'பாரத ரத்னா' பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சம்மான் சமரோஹ் என்னும் பயிலரங்கம் நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார்.அவர் பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரை தேர்தலில் தோல்வியடையச் செய்தனர்.1956 டிசம்பர் 6 அன்று டில்லியில் உள்ள அவரது வீட்டில் இறந்த டாக்டர் அம்பேத்கரின் இறுதிச் சடங்குகள் புத்த மரபுகளின்படி செய்யப்பட்டன. அவரது இறுதி ஊர்வலம் மும்பையில் இருந்து டில்லிக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரினர். ஆனால், இறுதி சடங்குகளை டில்லியில் நடத்த காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. அவரது நினைவிடத்தை எழுப்பவும் அனுமதிக்கவில்லை. மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள சைத்ய பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதில் அக்கால காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தது.இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

TRE
ஏப் 22, 2025 16:39

உபி மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்


V.Mohan
ஏப் 13, 2025 22:29

யோகி அவர்கள் கூறுவது போல அம்பேத்கர் இருந்த போதும், இறந்த போதும் அவருக்குரிய மரியாதை செய்யாத உயர்சாதித்தனம் பிடித்த காங்கிரஸ் இளவரசர் வெளிவேஷத்திற்காக, பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தங்கள் கட்சி தலைவர் ஆக்கியும் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் முக்கியம் தந்து முன்னேற்றுவோம் என சுதந்திரத்திற்கு 82 ஆண்டு பின்னால் கூறுகின்றனர், வெட்கக்கேடு.. சாதி துவேஷம் இல்லாத ஹிந்து நாடாக இருக்க வேண்டும் என விரும்பிய அம்பேத்கரை அவமதித்த நேருவின் வாரிசுகளின் கட்சியான காங்கிரஸ் கட்சியினர், ஊரை ஏமாற்ற நாடகம் போடுகின்றனர். முதலில் இந்த பசந்தோல் போர்த்திய புலிகளின் வாரிசுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்


முருகன்
ஏப் 13, 2025 20:25

இவர்களுக்கு தெரிந்தது இரண்டு... ஒன்று காங்கிரஸை குறை கூறுவது... மற்றொன்று அதை உலகம் அறியும்


M Ramachandran
ஏப் 13, 2025 20:11

காங்கிரஸ்காரர்களின் உடான்ஸெல்லாம் இப்போ ஒன்று ஒன்று ஆக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கே.


மீனவ நண்பன்
ஏப் 13, 2025 20:03

திராவிட தலைங்க அம்பேத்கருக்கு உரிய மரியாதை செலுத்துவதில்லை .. பெரியார் தான் இவர்களுக்கு முன்னோடி ..


A Viswanathan
ஏப் 13, 2025 19:43

That Italian lady not allowed to keep his body in Delhi Congress office (நரசிம்ம rao ex.congress President, than PM )after his death .


சமீபத்திய செய்தி